தளபதி விஜய்யின் படம் என்றால் கண்டிப்பாக தமிழ்நாட்டில் வசூல் வேட்டை நடக்கும் என்பது அனைவரும் அறிந்தது தான். அதுவும் கடைசியாக வெளிவந்த லியோ தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 200 கோடிக்கும் மேல் வசூல் செய்திருந்தது.
இதனால் லியோ படத்தை தொடர்ந்து வெளிவந்த GOAT படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பும் இருந்தது. கலவையான விமர்சனங்கள் இப்படத்தின் மீது இருந்தாலும் கூட வசூலில் பட்டையை கிளப்பி வரும் GOAT, இதுவரை தமிழகத்தில் செய்துள்ள வசூல் குறித்து பார்க்கலாம்.
வசூல் விவரம்
தமிழ்நாட்டில் GOAT படம் ரூ. 130 கோடி வசூல் செய்தாலே அது Break even என சொல்லப்பட்ட நிலையில் இதுவரை ரூ. 170 கோடி வரை வசூல் செய்துள்ளது. இதன்மூலம் மாபெரும் லாபத்தை GOAT தமிழ்நாட்டில் கொடுத்துள்ளது என்கின்றனர்.
லியோ படத்தை போலவே GOAT திரைப்படமும் தமிழ்நாட்டில் ரூ. 200 கோடிக்கும் மேல் வசூல் செய்கிறதா என்று இனி வரும் நாட்களில் பொறுத்திருந்து பார்க்கலாம்.