புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க மற்றும் திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோருடன் கலந்துரையாடியுள்ளார்.
பொருளாதார விவகாரங்கள் தொடர்பில் இந்த உயர்மட்ட சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அநுரகுமார திசாநாயக்க, பல்வேறு மட்டங்களிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளை நிறைவேற்றி வருகிறார்.
ஏற்கனவே, இதற்கான ஏற்பாடுகளை அவரின் கட்சி மேற்கொண்டிருந்த நிலையிலேயே தற்போதைய பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.