கமலஹாசன் மீது வழக்கு பதிவு..!!

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, தூத்துக்குடியில் 144 தடையை மீறி பேரணியாகச் சென்ற ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 100 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேரில் சென்று பார்த்தார். அவர்களது உடல்நலம் குறித்து விசாரித்த கமல்ஹாசன் அவர்களுக்கு ஆறுதல் கூறினார். பின், பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர், பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த ஆணையிட்டவர் யார்? ஸ்டெர்லைட் போராட்டத்தில் இழந்த உயிர்களுக்கு ஒரே மாற்று ஆலையை மூடுவது தன என குறிப்பிட்டார்.

இந்த நிலையில், தூத்துக்குடி நகரம் முழுவதும் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டிருந்த நிலையில். 5 பேருக்கு மேல் மருத்துவமனைக்கு செல்ல மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது, ஆனால், நடிகர் கமல்ஹாசன் 20 பேருடன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இதனடிப்படையில்யதாக கமல்ஹாசன் மீது தென்பாகம் காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like