கீரிமலை நகுலேஸ்வரம் கோயில் கோபுரத்திற்கு இடி விழுந்தது ஏன்…?

யாழ்.குடாநாட்டில் நேற்று நண்கல் பரவலாகப் பொழிந்த இடியுடன் கூடிய மழையின் போது, கீரிமலை நகுலேசுவரம் ஆலய நுழைவாயிற் கோபுரத்தின் யாளிகள் மின்னல் தாக்கத்தால் சேதமடைந்தன.கோபுரத்தின் வர்ணப்பூச்சு வேலைகள் இடம்பெற்று வரும் நிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.மின்னல் தாக்கத்திலிருந்து பாதுகாக்கவே கோபுர கலசங்களில் வரகு தானியம் இடப்படுகின்றது. எனினும் நகுலேஸ்வரம் ஆலய கோபுரத்தின் சீரமைப்பு பணிகள் தொடர்ந்தும் இடம் பெறுவதால், கலசங்கள் பிரதிஷ்டை செய்யப்படவில்லை. அதனாலேயே மின்னல் தாக்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.இதேவேளை, குடாநாட்டில் நேற்றும் இரண்டு இடங்களில் மின்னல் தாக்கத்தால் 2 தென்னை மரங்களில் தீப் பிடித்ததுடன், வீடு ஒன்றின் மின் இணைப்பும் பழுதடைந்தது.அத்துடன், சாவகச்சேரி மகளிர் கல்லூரியின் கணினி ஆய்வு கூட மின்மானியும் மின்னல் தாக்கத்தால் தீப் பிடித்தமை குறிப்பிடத்தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like