டுவிட்டர் நிறுவனத்தின் புதிய முயற்சி

சமூக வலைத்தளங்களில் கணக்கு வைத்திருக்கும் பிரபலங்களின் உண்மையான கணக்கினை பயனர்கள் இலகுவாக அறிந்துகொள்ளும் பொருட்டு விசேட அடையாளம் ஒன்று காட்சிப்படுத்தப்படும்.

இதேபோன்றதொரு அடையாளத்தினை தேர்தலில் போட்டியிடுபவர்களின் கணக்கிலும் காண்பிக்க டுவிட்டர் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்த தகவலை டுவிட்டர் நிறுவனம் உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.

2018ம் ஆண்டின் நடுப் பகுதியில் அமெரிக்காவில் செனட் தேர்தல் நடக்கவுள்ளது.

இந்த தேர்தலில் போட்டியிடுபவர்களின் கணக்கில் இவ் வகை அடையாளங்களை முதன் முறையாக அறிமுகம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் திணைக்களத்தினால் அனுமதி வழங்கப்பட்டு வாக்குச் சீட்டில் பெயர்கள் இடம்பெற்ற பின்னர் போட்டியாளர்களின் டுவிட்டர் கணக்குகளில் இவ் அடையாளங்கள் காண்பிக்கப்படும்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like