வட பகுதியை உலுக்கிய மற்றுமொரு சோகம் – இளைஞன் பரிதாபமாக பலி

வவுனியாவில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

வவுனியா வாரிக்குட்டியூர் பகுதியைச் சேர்ந்த 22 வயதான க.மிதுசன் என்ற இளைஞனே மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

தந்தையின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக வவுனியா நகரிலிருந்து வாரிக்குட்டியூருக்கு சென்ற போது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் வாரிக்குட்டியூர் நோக்கி வாகனத்தில் சென்றுள்ளார். வாகனத்தைச் சுத்தம் செய்வதற்காக, சுத்தம் செய்யும் இயந்திரத்தின் பவர் பட்டனை அழுத்தியுள்ளார். இதன்போது மின்சாரத் தாக்குதலுக்குள்ளாகி அவர் தூக்கி வீசப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

அவரை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்த போதும் அவர் உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணத்தில் நேற்று மின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் உயிரிழந்தமை அந்தப் பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like