தளபதி-62 படத்தின் டைட்டில் இதுவா? ரசிகர்கள் கொண்டாட்டம்

தளபதி விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் செட் அமைத்து பிரமாண்டமாக எடுத்து வருகின்றனர்.

இப்படத்திற்கு என்ன டைட்டில் வைக்கலாம் என்று படக்குழு மிகவும் யோசித்து வர, கோடாரி என்று வைத்தால் சரியாக இருக்கும் என முடிவு செய்துள்ளதாக பிரபல நாளிதழ் கூறியுள்ளது.

ஏற்கனவே விஜய், முருகதாஸ் படத்திற்கு கத்தி, துப்பாக்கி என்று டைட்டில் வைத்தது குறிப்பிடத்தக்கது, கோடாரி அதிகாரப்பூர்வமானது இல்லை என்றாலும் ரசிகர்களுக்கு பிடித்துவிட்டது.

விஜய் பிறந்தநாள் அன்று பர்ஸ்ட் லுக்குடன் படத்தின் டைட்டில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

#Thalapathy 62 #Vijay #A.R.Murugadoss

Get real time updates directly on you device, subscribe now.

You might also like