தமிழர் தாயக உதைபந்தாட்ட வரலாற்றில் மற்றுமொரு பரிமாணம்.. இன்னும் 3 நாட்கள் மாத்திரமே

தமிழர் தாயகத்தின் எட்டு மாவட்ட வீரர்களும் ஒரே களத்தில் மோதும், வடகிழக்கின் முதலாவது உதைபந்தாட்ட சுற்றுத் தொடருக்கு (North East Premier League) இன்னும் மூன்று நாட்கள் மாத்திரமே உள்ளது.

தாயக வீரர்களுடன் வெளிநாட்டு வீரர்களும் விளையாடும் உதைபந்தாட்டத் தொடரின் அங்குரார்ப்பண வைபவம் யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் எதிர்வரும் 30ஆம் திகதி மாலை 6 மணிக்கு கலை நிகழ்சிகளும் இடம்பெறுகின்றன.

தொடர்ச்சியாக இரண்டு மாதங்கள் நடைபெறும் இந்த போட்டிக்கு அனைவரையும் அழைக்கின்றோம்.

12 அணிகள் மோதிக்கொள்ளும் விறுவிறுப்பான உதைபந்தாட்ட தொடரின், முதல் பரிசு 50 இலட்சம் ரூபாய், 2ஆம் பரிசு 30 இலட்சம், 3ஆம் பரிசு 15 இலட்சம் ரூபாயாகும்.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

மேலம், நான்காம் இடத்தைப் பெறும் அணிக்கும் 5 இலட்சம் ரூபா பரிசுத் தொகையும் வழங்கப்படும்.

மட்டக்களப்பில் இருந்து பட்ரி சுப்பர் கிங்ஸ் அணியும், திருகோணமலை சார்பில் ரிங்கோ டைட்டன்ஸ் அணியும் களம் காண்கின்றது.

இந்த தொடரின் சவாலில் இணைகின்றனர் கிழக்கின் அம்பாறை அவென்ஜேர்ஸ் அணி வீரர்கள்.

கிளிநொச்சி – கிளியூர் கிங்ஸ்சும், மன்னார் – மன்னார் ஏப்.சி, மாதோட்டம் ஏப்.சி அணிகளும் களத்தில், முல்லைத்தீவு – முல்லை ஃபீனிக்ஸ்சும், வவுனியா – வவுனியா வொரியஸ்சும் தொடரில் இணைகின்றன.

யாழ் மாவட்டம் சார்பில் ரில்கோ கொன்கியூரஸ் (Conquerors, ) வல்லை ஏப்.சி, நோதர்ன் எலைய்ட் ஏப்.சி மற்றும் தமிழ் யுனைட்டட் கழங்களும் இம்முறை களத்தில் இறங்குகின்றன.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like