கள்ளத் தொடர்பினால் வந்த வினை: மனைவியை சரமாரியாக வெட்டினார் கணவன்!! வவுனியாவில் பயங்கரம்!!

வவுனியா நெழுக்குளம் குழுமாட்டு சந்தி பகுதியில் உள்ள பேருந்து சாரதியான ரஞ்சன் என்பவர் தனது மனைவியான மனோஜிக்கா என்பவரை சித்திரவதை செய்து கத்தியினால் வெட்டிய பின் நெழுக்குளம் பொலிஸாரிடம் சரண்டைந்துள்ளார்.

கணவன் வெட்டியதில் படுகாயமடைந்த மனைவி வவுனியா பொதுவைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. மேலும், இவர்கட்கு மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

வவுனியா தோணிக்கள் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவருடன் குறித்த பெண்ணுக்கு தகாத உறவு இருந்ததாகவும், குறித்த நபருடன் பெண் தொடர்பு வைத்திருந்ததை அறிந்த கணவன் ஏற்கனவே வவுனியா சிறுவர் பெண்கள் குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்திருந்துள்ளார்.

அத்துடன் குறித்த நபருடன் பெண் தப்பித்து செல்லும் போது ஈரற்பெரியகுளம் பகுதியில் பிடிக்கப்பட்டு ஈரற்பெரிய குளம் பொலிஸில் வைத்து இரு தரப்பினருக்கமிடையில் சமாதானப்படுத்தி கணவனுடன் மனைவியை செல்லுமாறு அனுப்பி வைத்துள்ளனர்

இந்நிலையிலேயே, இன்றைய தினம் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like