ரகுவரன் மரணத்தில் நடந்த கொடுமை இனி யாருக்கும் நடக்கக் கூடாது? பல வருடங்களின் பின்னர் சோகத்தை கூறிய மனைவி

ரகுவரன் இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா நடிகர். இவர் வில்லத்தனத்தை ஈடுக்கட்ட இன்று வரை யாருமில்லை என்பதே உண்மை.

இந்த நிலையில் இவருடைய மனைவி ரோகினி சமீபத்தில் ஒரு பேட்டியில், மிகவும் உணர்ச்சிவசப்பட்டு சில கருத்துக்களை கூறியுள்ளார்.

இதில், ‘ரகுவரன் மரணத்தின் போது பத்திரிகையாளர்கள் யாரும், வீட்டின் உள் வந்து புகைப்படம் எடுக்கவேண்டாம் என்று கவலையுடன் கூறியுள்ளார்.

ஆனால், நான் என் மகனை அழைத்து வந்த போது அனைவரும் உள்ளே வந்து புகைப்படம் எடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

உண்மையாகவே எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது, அதை தொடர்ந்து சில வருடங்கள் நான் எந்த பத்திரிகையிலும் பேசவில்லை.

அந்த நேரத்தில் கூட தனிமை இல்லையென்றால் என்ன செய்வது, இந்த கொடுமை இனி எந்த ஒரு இடத்திலும் நடக்கக்கூடாது ’ என்றும் கவலையுடன் ரோகினி கூறியுள்ளார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like