வடக்கு, கிழக்­கில்- 65 ஆயிரம் வீடு­கள்- ரணில் உறுதி!!

வடக்கு – கிழக்­கில் 25 ஆயி­ரம் வீடு­கள் தேசிய நல்­லி­ணக்க அமைச்­சின் ஊடா­க­வும், 40 ஆயி­ரம் வீடு­கள் மீள்­கு­டி­யேற்ற அமைச்­சின் ஊடா­க­வும் அமைக்­கப்­ப­ட­வுள்­ளன என்று தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­தார்.

யாழ்ப்­பாண மாவட்­டச் செய­ல­கத்­தில் நேற்று இடம்­பெற்ற கலந்­து­ரை­யா­ட­லி­லேயே அவர் அவ்­வாறு தெரி­வித்­தார். அவர் தெரி­வித்­தா­வது,

வடக்கு -– கிழக்­கில் வீடு தொடர்­பான பிரச்சினை பிர­தா­ன­மா­னது. அதைத் தீர்ப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. நல்­லி­ணக்க அமைச்­சின் ஊடாக 25 ஆயி­ரம் கல் வீடு­கள் அமைக்­கப்­ப­டும். அதே­போன்று மீள்­கு­டி­யேற்ற அமைச்­சின் ஊடாக 40 ஆயி­ரம் வீடு­கள் அமைக்­கப்­ப­டும். மீள்­கு­டி­யேற்ற அமைச்சு ஊடா­க­வும் கல் வீடு­களே அமைக்­கப்­ப­ட­வுள்­ளது – என்­றார்.

அதே­வேளை, வடக்கு – கிழக்­கில் 50 ஆயி­ரம் கல்­வீ­டு­கள் அமைக்­கப்­ப­டும் என்று கடந்த ஆண்டு வரவு – செல­வுத் திட்­டத்­தில் கூறப்­பட்­டி­ருந்­தது. அதற்கு மேல­தி­க­மா­கத் தற்­போது 15 ஆயி­ரம் வீடு­கள் வடக்கு, கிழக்­கில் அமைக்­கப்­ப­ட­வுள்­ளன என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த வீடு­கள் நல்­லி­ணக்க அமைச்­சின் ஊடாக முன்­னெ­டுக்­கப்­ப­டும் என்று தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. அதற்கு அமை­வாக முதல் கட்­டத்­தில் 25 ஆயி­ரம் வீடு­களை, யுஎன் ஹபிட்­டாட், யுனொப்ஸ், எஸ்.எல்.ஆர்.சி ஊடாக அமைப்­ப­தற்கு அந்த நிறு­வ­னங்­க­ளு­டன் பேச்சு நடத்த அமைச்­ச­ரவை அனு­மதி வழங்­கி­யுள்­ளது. எஞ்­சிய 25 ஆயி­ரம் வீடு­கள் அடுத்த கட்­டத்­தில் அமைக்­கப்­ப­டும் என்று கூறப்­பட்­டி­ருந்­தது.

இந்த நிலை­யில் மீள்­கு­டி­யேற்ற அமைச்சு, தனி­யார் ஒப்­பந்த நிறு­வ­னத்­தின் ஊடாக 40 ஆயி­ரம் கல் வீடு­களை நிர்­மா­ணிக்­க­வுள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இத­னால் நல்­லி­ணக்க அமைச்­சின் ஊடாக 25ஆயி­ரம் வீடு­கள் அமைக்­கப்­ப­டாது என்று கூறப்­பட்­டுள்­ளது.  மீள்­கு­டி­யேற்ற அமைச்சு அமைக்­க­வுள்­ளன என்று கூறப்­ப­டும் கல்­வீ­டு­கள், கொங்­கி­றீட் பிளேட்­டு­க­ளால் கட்­டப்­ப­டும் வீடு­கள் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like