பொலி­ஸ் வாக­னம் மோதி­ முதி­ய­வர் உயிரிழப்பு- பாத­சா­ரி­கள் கட­வை­யில் வீதியை கடந்­த­ போது விபத்து!!

பாத­சா­ரி­கள் கட­வை­யால் கடக்க முயன்­ற­போது வட்­டுக்­கோட்­டைப் பொலி­ஸா­ரின் வாக­னத்­தில் மோதிப் படு­கா­ய­ம­டைந்த முதி­ய­வர் சிகிச்சை பய­னின்றி உயி­ரி­ழந்­தார்.

வட்­டுக்­கோட்டை மேற்­கைச் சேர்ந்த வேலுப்­பிள்ளை மகேந்­தி­ரம் (வயது-65) என்­ப­வரே உயி­ரி­ழந்­த­வ­ரா­வார்.

இந்த விபத்­துக் கடந்த 25ஆம் திகதி நடந்­துள்­ளது. வட்­டுக்­கோட்டை மாவ­டிச் சந்­தி­யில் உள்ள கடை­யொன்­றில் பொருள்­களை வாங்கி வீடு திரும்­பிய முதி­ய­வர் பாத­சா­ரி­கள் கட­வை­யால் வீதி­யைக் கடந்­துள்­ளார். அப்­போது வட்­டுக்­கோட்­டைப் பொலி­ஸா­ரின் மோட்­டார் சைக்­கிள் அவரை மோதி­யது.

படு­கா­ய­ம­டைந்த முதி­ய­வர் யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டார். 3 நாள்­கள் சிகிச்சை பெற்­று­வந்த அவர் சிகிச்சை பய­னின்றி நேற்­றுக் காலை உயி­ரி­ழந்­தார்.

இறப்­புத் தொடர்­பான விசா­ர­ணை­களை திடீர் இறப்பு விசா­ரணை அதி­காரி ந.பிறே­ம­கு­மார் மேற்­கொண்­டார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like