அரா­லித்­துறை – குறி­காட்­டு­வான் வீதி சீர­மைப்பு ஓகஸ்ட் ஆரம்­பம்!!

அரா­லித்­து­றை­யி­லி­ருந்து வேலணை, புங்­கு­டு­தீவு ஊடாகக் குறி­காட்­டு­வான் வரை­யி­லான வீதி­யின் சீர­மைப்புப் பணி­கள் எதிர்­வ­ரும் ஓகஸ்ட் மாதம் ஆரம்­பிக்­கப்­ப­டும் என்று வீதி அபி­வி­ருத்தி அதி­கார சபை­யின் திட்­டப் பணிப்­ப­ணிப்­பா­ள­ரால் தெரி­விக்­கப்­பட்­டது.

தலைமை அமைச் சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யில் யாழ்ப்­பாண மாவட்­டச் செய­ல­கத்­தில் நேற்று இடம்­பெற்ற கலந்­து­ரை­யா­ட­லி­லேயே இந்த விட­யம் தெரி­விக்­கப்­பட்­டது.

கொடி­கா­மம் – பரு­தித்­தித்­துறை – பொன்­னாலை வரை­யான வீதி, காரை­ந­கர் – மானிப்­பாய் – யாழ்ப்­பா­ணம் வரை­யான வீதி, அரா­லித்­துறை – வேலணை – புங்­கு­டு­தீவு – குறி­கட்­டு­வான் வரை­யான வீதி அபி­வி­ருத்­திப் பணி­கள் இடம்­பெற்று வரு­கின்ற என்று தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு வீதி அபி­வி­ருத்தி அதி­கார சபை­யின் திட்­டப் பணிப்­பா­ள­ரால் கூறப்­பட்­டது.

இதன்­போது, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சி.சிறீ­த­ரன், அரா­லித்­து­றை­யி­லி­ருந்து குறி­காட்­டு­வான் வரை­யி­லான வீதி மறு­சீ­ர­மைப்பு நடை­பெ­றும் என்று 3 ஆண்­டு­க­ளா­கப் பல்­வேறு கூட்­டங்­க­ளில் நீங்­கள் சொல்லி வரு­கின்­றீர்­கள். அது எப்­போது ஆரம்­பிக்­கப்­ப­டும் என்­ப­தைக் கூறுங்­கள் என்­றார்.

இது தொடர்­பான மதிப்­பீட்­டுப் பணி­கள் இடம்­பெற்று வரு­கின்­றன என்று திட்­டப் பணிப்­பா­ள­ரால் கூறப்­பட்­டது. அத­னை­வி­டுத்து எப்­போது என்று கூறுங்­கள் என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சி.சிறீ­த­ரன் கேட்க, எதிர்­வ­ரும் ஓகஸ்ட் மாதம் ஆரம்­ப­மா­கும் என்று குறிப்­பிட்­டார். நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சி.சிறீ­த­ரன், திட்­டப் பணிப்­பா­ளர் கூறி­யதை கவ­ன­மா­கக் குறிப்­பெ­டுத்து வைக்­கு­மாறு தெரி­வித்­தார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like