வவுனியாவில் உயர் தரத்தில் கல்விகற்கும் மாணவனை காணவில்லை!

வவுனியா வைரவபுளியங்குளத்தில் உள்ள தனியார் கல்வி நிலையத்திற்கு செல்வதாக கூறிவிட்டு, வீட்டில் இருந்து சென்ற மாணவனைக் காணவில்லை என பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த மாணவர் வர்த்தக பிரிவில் கல்வி கற்று வருவதாகவும், இந்நிலையில் நேற்று மதியம் 2 மணியளவில் தனியார் கல்வி நிலையத்திற்கு செலவதாக கூறியவர் மீண்டும் வீடு வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு காணாமற்போனவர் வவுனியா வெளிக்குளம் பகுதியில் வசிக்கும் சிவசீலன் சாருபன் என்றும், அவர் இந்த வருடம் க.பொ.த. உயர்தர பரீட்சையில் தோற்ற இருப்பவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இவரை பற்றிய தகவல் தெரிந்தவர்கள் கீழ் காணும் இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு உறைவினார்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். 0779500230

Get real time updates directly on you device, subscribe now.

You might also like