சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு நீதிமன்றம் குடுத்த தண்டனை!!

தேனி மாவட்டம் சின்னமனுாரைச் சேர்ந்தவர் ராஜு (வயது 75). இவர் தேனி முல்லை நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில், வாட்ச் மேனாக பணியாற்றி வந்தார். அம்மையாச்சியாபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு 12 வயதுச் சிறுவன், முல்லை நகரில் உள்ள தங்களது உறவினர் வீட்டில் தங்கிப் படித்து வந்தான்.

கடந்த 17-8-2015 –ஆம் நாள், அந்த சிறுவனுக்கு, முதியவர் ராஜு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து வெளியே சொன்னால், கொன்று விடுவதாகவும் மிரட்டி உள்ளார்.

அந்த சிறுவன், இது குறித்து, தன் உறவினரிடம் தெரிவித்துள்ளான். இதனைத் தொடர்ந்து, பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில், அந்த முதியவர் மீது புகார் அளிக்கப் பட்டது.

தேனி மகிளா நீதி மன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது. நேற்று இந்த வழக்கின் தீ்ர்ப்பை திலகம் வழங்கினார். அதன்படி, முதியவர் ராஜுவிற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

இதனைத் தொடர்ந்து, முதியவர் தேனி சிறையில் அடைக்கப் பட்டார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like