தமிழ் மொழிக் கொலைகள்…!! கேட்பதற்கு எவருமே இல்லையா….?

அலட்சியம் செய்யாது கட்டாயமாகப் படியுங்கள்.சிரிப்பதற்கு அல்லாது சிந்திக்க வேண்டிய விடயம்.

சங்க காலத்து மொழியானதும் நமது தாய்மொழியானதுமான தமிழ் மொழியானது நம் நாட்டின் பல்வேறு இடங்களின் பெயர்ப் பலகைகள், காரியாலயப் பலகைகள் மற்றும் அறிவித்தற் பலகைகள் என்பவற்றில் கடுமையான முறையில் கொலை செய்யப்படுகின்றதை காணமுடிகின்றது.

தாய் மொழியை களங்கப்படுத்துவதானது ஈன்ற தாயை களங்கப்படுத்துவதற்கு ஒப்பானது. உலகத்திற்கே தெரியும் நமது தமிழ் மாதாவின் பெருமை.யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்’ என்ற முது மொழி சொன்ன புலவன் என்ன பொழுது போக்காகவா சொன்னான்?……….

நண்பர்களே.. இனிமேலும் இவ்வாறான தவறுகள் நடப்பதற்கு நாம் இடமளிக்கக் கூடாது.ஒரு பெயர்ப்பலகையை சரிபார்ப்பற்கு இவர்களுக்கு எவ்வளவு நேரம் தேவை…? தவறுதலாக நடக்கின்றது என்று மீண்டும் மீண்டும் சொல்வது மன்னிக்க முடியாத குற்றம்.

ரஸ்யா நாட்டின் பல இடங்களில் ஆறாவது மொழியாக தமிழ் மொழி உபயோகப்படுத்தப்படுகிறது.எனினும் அவர்களின் பெயர்ப் பலகையில் ஒரு பிழையைக்கூட காண முடிவதில்லை.ஏன் இலங்கையில் மட்டும் இவ்வாறு நடக்கின்றது…..?

 

 

 

 

 

 

 

 

சுதந்திர தினத்தில் தமிழ் மொழியில் தேசியகீதம் பாடப்பட்டதையிட்டு பெருமையடைந்தோம்.ஆனால், அது அவர்களின் கடமை.இலங்கையின் ஒரு அடையாள மொழி தமிழ்.

எனவே, எனது அருமை நண்பர்களே இனி நாம் இந்த மொழிக் கொலைக்கு அனுமதிக்கக் கூடாது.இப்படியான தவறான சொற்பிரயோகங்களை நீங்கள் இலங்கையின் எந்தப்பிரதேசத்தில் கண்டாலும் உரிமையுடன் தயக்கமின்றித் தட்டிக்கேளுங்கள்.

நீங்கள் தட்டிக்கேட்க தவறுவீர்களானால், நமது தாய்மொழி மேலும் களங்கப்படுத்தப்பட்டுக்கொண்டே செல்லும் என்பதில் ஐயமில்லை.
”பெற்றெடுத்த தாயை நேசிக்கும் எந்தவொரு தமிழனும் தனது தாய் மொழியையும் நேசிப்பான்”

தயவு செய்து அனைவருக்கும் பகிருங்கள்.ஏனென்றால், எமது மொழியை பாதுகாக்க வேண்டியது எமது தலையாய கடமை.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More