மன்னாரில் தொடரும் அகழ்வுப் பணி – எலும்பு எச்சங்கள் கண்டுபிடிப்பு!!

மன்­னார் லங்கா சதொச வளா­கத்­தில் நேற்று ஐந்­தா­வது நாளா­க­வும் அகழ்­வுப் பணி­கள் நடை­பெற்­றன. நேற்று பெரி­ய­ள­வி­லான மனித எலும்பு எச்­சங்­கள், பற்­கள்,தடை­யப்­பொ­ருள்­க­ளான பொலித்­தீன் பக்­கற், சோடா மூடி உள்­ளிட்ட சில தடை­யப்­பொ­ருள்­கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன.

மன்­னார் நுழை­வா­யி­லுக்கு அண்­மை­யில் உள்ள லங்கா சதொச வளா­கத்­தில் மேற்­கொள்­ளப்­ப­டும் கட்­டு­மா­னத்­துக்­காக அக­ழப்­பட்ட மண்­ணில் மனித எலும்பு எச்­சங்­கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன. அது தொடர்­பில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டதை அடுத்து அக­ழப்­பட்ட மண்­ணி­லும், லங்கா சதொச வளா­கத்­தி­லும் அகழ்­வுப் பணி­கள் நடை­பெ­று­கின்­றன.

கடந்த 4 நாள்­க­ளாக மன்­னார் மாவட்ட நீதி­வான் நீதி­மன்ற நீதி­பதி ஏ.ஜி.அலெக்ஸ்­ராஜா தலை­மை­யில் நடை­பெற்­று­வ­ரும் அகழ்­வுப் பணி­க­ளில் மனித எலும்பு எச்­சங்­கள் பல கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன.

ஏற்­க­னவே மேற்­கொள்­ளப்­பட்டு வரும் இடத்­தில் நேற்று அங்­கு­லம் அங்­கு­ல­மாக மேற்­கொள்­ளப்­ப­டும் அகழ்வு பணி­யில் முழு­மை­யான மனித உருவ எழும்­புக் கூடு­கள் தென்­ப­டா­த­போ­தும் ஆங்­காங்கே சிறு சிறு எலும்­பு­கள் பற்­கள் தென்­ப­டு­கின்­றன என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

சட்ட மருத்­துவ அதி­காரி டபிள்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஐ­பக்ச தலை­மை­யில் நடை­பெ­றும் இந்த அகழ்­வுப் பணி காலை ஏழு மணி தொடக்­கம் நண்­ப­கல் 12.30 மணி­யு­டன் இடை நிறுத்­தப்­பட்­டது. இன்­றும் நாளை­யும் அகழ்­வுப் பணி இடை நிறுத்­தப்­பட்­டுள்­ளது என­வும் மீண்­டும் திங்­கள்­கி­ழமை வழ­மை­போன்று காலை ஏழு மணிக்கு ஆரம்­பிக்­கப்­ப­டும் என­ வும் தெரி­விக்­கப்­பட்­டது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like