வைரலாகும் ‘காலா’ படத்தில் கண்ணம்மா பாடல்! (விடியோ)

காலா படத்தில் இடம்பெற்றுள்ள கண்ணம்மா என்ற பாடல் யூட்யூபில் ஏற்கனவே கடந்த மாதம் வெளிவந்து ரசிகர்களிடையே வைரலானது.

நேற்று இந்தக் ‘கண்ணம்மா’ பாடல் விடியோ பிரோமோவை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மகள் தீ மற்றும் பாடகர் பிரதீப் குமார் இப்பாடலை பாடியுள்ளனர். உமா தேவியின் வரிகளின் இதன் கோடை வெயிலை மறக்க வைக்கும் இதமளிக்கிறது.

இப்பாடலின் ப்ரொமோ வெளியான ஒரே நாளில் கிட்டத்தட்ட 5 லட்சம் பார்வையாளர்களைப் பெற்றுவிட்டது.

கண்ணம்மா என்ற சொல்லில் ஆரம்பிக்கும் எந்தப் பாடலும் உடனுக்குடன் மனத்துக்குப் பிடித்துவிடும் போல….இப்பாடலின் சில வரிகள்….

‘பூவாக என் காதல் தேனூறுதோ
தேனாக தேனாக வாயுறூதோ’
எனத் தொடங்கி,

கண்ணம்மா கண்ணம்மா
கண்ணிலே என்னம்மா
ஆகாயம் சாயாம தூவானம் ஏது
ஆறாம ஆறாம காயங்கள் ஏது
கண்ணம்மா கண்ணம்மா
கண்ணிலே என்னம்மா….

உன் காதல் வாசம்என் தேகம் பூசம்
காலங்கள் பொய்யானதே
தீராத காதல் தீயாக மோத
தூரங்கள் மடை மாறுமோ
நான் பார்த்து ஏங்கும் சிறு புல்லின் தாகம்
கானல்கள் நிறைவேற்றுமோ

Get real time updates directly on you device, subscribe now.

You might also like