தவ­ரா­சா­வி­டம் வாய்­கொ­டுத்து – வாங்­கிக் கட்­டிய விஜ­ய­கலா

அபி­வி­ருத்­திக்­கான ஒதுக்­கீ­டு­கள் தொடர்­பில் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­ சிங்­க­வி­டம் கேட்­டி­ருக்­க­லாமே என்று இரா­ஜாங்க அமைச்­சர் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன் கேள்வி எழுப்ப, அவ­ரி­டம் கேட்க அந்­தக் கூட்டத்­தில் வாய்ப்பு வழங்­கப்­ப­ட­வில்லை என்­றும், இந்­தப் பிரச்­சி­னை­ களை ரணி­லி­டம் கேட்­கா­மல், டொனால்ட் ட்ரம்­பி­டமா (அமெ­ரிக்க அர­ச­த­லை­வர்) கேட்­பது என்று, வடக்கு மாகாண எதிர்­கட்­சித் தலை­வர் சி.தவ­ராசா பதில் கேள்வி எழுப்­பி­னார்.

யாழ்ப்­பாண மாவட்ட ஒருங்­கி­ணைப்­புக் குழுக் கூட்­டம் நேற்று இடம்­பெற்­றது. அரச அதி­கா­ரி­க­ளி­டம், நிதி ஒதுக்­கீடு அதி­க­ரித்து வழங்­கு­வது தொடர்­பில் அர­சி­யல்­வா­தி­கள் கேள்­வி­க­ளால் குடைந்து கொண்­டி­ருந்­த­னர்.

இதன்­போது எதிர்­கட்­சித் தலை­வர் சி.தவ­ராசா, அரச அதி­கா­ரி­க­ளி­டம் ஏன் அதைக் கேட்­கின்­றீர்­கள். அர­சி­யல் ரீதி­யாக அணு­கப்­பட வேண்­டிய விட­யம். அர­சி­யல் ரீதி­யாக அர­சி­யல்­வா­தி­கள்­தான் இத­னைப் பேசவேண்­டும் என்று குறிப்­பிட்­டார்.

‘கடந்த வாரம் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­ சிங்க இங்கு வந்­த­போது அத­னைக் கேட்­டி­ருக்­க­லாமே?’ என்று இரா­ஜாங்க அமைச்­சர் கேள்வி எழுப்­பி­னார். அதற்கு எதிர்­கட்­சித் தலை­வர், கடந்த கூட்­டத்­தில் அவ­ரி­டம் கேட்­ப­தற்கு வாய்ப்பு தரப்­ப­ட­வில்­லையே. அவ­ரி­டம் கேட்­கா­மல், ட்ரம்­பி­டமா நாங்­கள் கேட்­பது என்று குறிப்­பிட்­டார்.