பலருக்கு அதிர்ச்சி கொடுத்த 75 வயதான பாட்டி!

கண்டி, நாவலப்பிட்டி பகுதியிலுள்ள வர்த்தக நிலையத்தில் இருந்தவர்களை ஏமாற்றி பணம் கொள்ளையடித்த 75 வயதுடைய பாட்டி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாவலப்பிட்டிய, பிரதேசத்தை சேர்ந்த பொக்கட் ஆச்சி என அழைக்கப்படும் பாட்டியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

வர்த்தக நிலையத்திற்கு சென்ற பாட்டி அங்கிருந்த பெண்களிடம் எனக்கு அவை புரியாது, எரிவாயு சிலிண்டர் ஒன்றை தெரிவு செய்து தருமாறு கூறியுள்ளார்.

அந்த பெண்கள் சிலிண்டர் தெரிவு செய்த சென்ற சந்தர்ப்பத்தில் அவர்களின் பைகளில் இருந்த பண பையை எடுத்த பாட்டி, சிலிண்டர் கொண்டு செல்ல முச்சக்கர வண்டி ஒன்றை அழைத்து வருவதாக கூறி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

பின்னர் இந்த பெண்கள் தங்கள் பையை தேட ஆரம்பித்துள்ளனர். அந்த பையில் பெறுமதியான பொருட்கள் இருந்துள்ளன.

பைக்குள் 15000 பெறுமதியான கையடக்க தொலைபேசி, மோதிரம், வங்கி கடன் அட்டை உட்பட பெறுமதியான பொருட்கள் மற்றும் 5800 ரூபா பணமும் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் மரக்கறி கொள்வனவு செய்த பொதிக்குள் இந்த பையை வைத்து கொண்டு பாட்டி பயணித்துள்ளார். எனினும் கையடக்க தொலைபேசியை செயழிலக்க செய்ய பாட்டி முயற்சித்த போதிலும், அவரால் அது இயலவில்லை.

ஒரு பையை தொலைத்த பெண் மற்றும் அவரது கணவர் பாட்டியை பேருந்து நிலையத்தில் வைத்து பிடித்துள்ளனர். எனினும் குற்றச்சாட்டை பாட்டி மறுத்துள்ளார். பாட்டி தொடர்பில் அந்த பெண் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டிற்கமைய பொலிஸார் பாட்டியை கைது செய்து அவரை பையை சோதனையிட்டுள்ளனர். பை தனது பேரனுடையதென பாட்டி குறிப்பிட்டுள்ளார். பின்னர் கையடக்க தொலைபேசிக்கு அழைப்பு ஏற்படுத்தி உண்மையை கண்டுபிடிக்க முடிந்துள்ளது.

இதன் போது பாட்டி சிக்கி கொண்டுள்ளமையினால் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் மேலும் பல திருட்டு சம்பவங்களுக்கு தொடர்புப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளதுடன் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like