பேருந்துடன் மோதி உந்துருளி கோர விபத்து!! ஸ்தலத்திலேயே இளைஞன் பலி!!

மலையகம் நாவலப்பிட்டி – கண்டி பிரதான வீதியில் பேருந்துடன், மோட்டார் சைக்கிளொன்று மோதி விபத்திற்கு உள்ளானதில் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.

இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ள நிலையில், நாலப்பிட்டி – பல்லேகல பகுதியை சேர்ந்த 24 வயதுடைய ஜயசேகர முதியன்சலாகே அமில என்ற இளைஞனே பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முந்திச் செல்ல பொருத்தமற்ற இடத்தில் மோட்டார் சைக்கிள் லொறியொன்றை முந்திச் செல்ல முற்பட்டுள்ளது.இதன்போதே, மோட்டார் சைக்கிள் வலுக்கிச் சென்று எதிரே வந்த பேருந்தில் மோதியுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை சடலம் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் மேலதிக விசரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like