வவுனியாவில் புதையல் தோண்ட முற்பட்ட மூவர் விசேட அதிரடிப்படையினரால் கைது!!

வவுனியா ஈரட்டைபெரியகுளம் பகுதியில் புதையல் தோண்டுவதற்குரிய பொருட்களுடன் வானில் பயணித்த மூவரை நேற்று (10.06.2018) விசேட அதிரடிப்படையினர் கைது செய்ததுடன் அவர்களிடமிருந்த பொருட்களையும் கைப்பற்றியுள்ளர்.

கண்டியிலிருந்து வானில் பயணித்த மூவர் நேற்றையதினம் வவுனியா நகரில் சந்தேகத்திற்கிடமான முறையில் வவுனியா நகர் முழுவதும் பயணித்துள்ளனர்.

இதனையடுத்து மாலை ஈரட்டைபெரியகுளம் எரிபொருள் மீள்நிரப்பு நிலையத்திற்கு அருகே குறித்த வாகனத்தினை விசேட அதிரடிப்படையினர் திடீர் சேதனை மேற்கொண்டபோது வானிலிருந்து ஸ்கானர் இயந்திரத்தினை கைப்பற்றியுள்ளனர்.

அதன் பின்னர் விசேட அதிரடிப்படையினர் கைது செய்யப்பட்ட 38,49,42 வயதுடைய மூவரையும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட தொலைபேசிகள், வான் என்பவற்றை ஈரட்டைபெரியகுளம் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

மேலதிக விசாரணைகளை ஈரட்டைபெரியகுளம் பொலிஸார் மேற்கொண்டுவருவதுடன் இன்றையதினம் சந்தேகநபர்களை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆயர்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like