யாழ் தென்மாராட்சியில் ஜே.சி.பியை பயன்படுத்தி தேர் இழுத்த சாதி வெறியால்! பதை பதைத்து பறி போன உயிர்..

வரணி சிமிழ் அம்­மன் ஆல­யத்­தில் ஈடு­பா­டு­டைய 80 வயது மூதாட்டி மன­உ­ளைச்­ச­லால் மயங்கி வீழ்ந்து உயி­ரி­ழந்­துள்­ளார் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­தச் சம்­ப­வம் வரணி சிமிழ் அம்­மன் கோவி­ல­டிப் பகு­தி­யில் நேற்று முன்­தி­னம் இடம்­பெற்­றுள்­ளது.இதே இடத்தை பிறப்­பி­ட­மா­கக் கொண்ட மூதாட்டி, யாழ்ப்­பா­ணத்­தில் பிள்­ளை­க­ளு­டன் அண்­மைக்­கா­ல­மாக தங்­கி­யி­ருந்­துள்­ளார்.

மூதாட்­டி­யின் உற­வி­னர்­க­ளால் பரம்­பரை பரம்­ப­ரை­யாக மேற்­கொண்டு வரும் திரு­வி­ழா­வுக்கு ஊருக்கு வந்த அவர் தேர்த் திரு­வி­ழா­வில் கலந்து கொண்­டி­ருந்­தார்.

ஆல­யத்­தின் தேர்த் திரு­வி­ழா­வில் இயந்­தி­ரம் மூலம் தேர் இழுக்­கப்­பட்­டதை வன்­மை­யா­கக் கண்­டித்த மூதாட்டி மூன்று தினங்­க­ளாக மன உளைச்­ச­லுக்கு உள்­ளான நிலை­யில் காணப்­பட்­டார் என­வும் நேற்­று­முன்­தி­னம் மாலை உற­வி­ன­ரு­டன் உரை­யா­டிக் கொண்­டி­ருந்த வேளை­யில் மயங்கி வீழ்ந்­துள்­ளார்.அங்­கி­ருந்து வாக­னம் மூலம் வரணி மருத்­து­வ­ம­னைக்கு எடுத்­துச் செல்­லப்­பட்­டார். பின்­னர் சாவ­கச்­சேரி மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு வரும்­வ­ழி­யில் உயி­ரி­ழந்­துள்­ளார்.

உயி­ரி­ழந்த நிலை­யில் மருத்­து­வ­ம­னைக்கு சட­லம் கொண்டு வரப்­பட்­ட­தால் சாவு விசா­ர­ணைக்­காக மருத்­து­வ­மனை சவச்­சா­லை­யில் சட­லம் வைக்­கப்­பட்­டி­ருந்­தது. கொடி­கா­மம் பொலி­ஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்டு நீதி­வான் முன்­னி­லை­யில் நேற்று அறிக்கை தாக்­கல் செய்­தி­ருந்­த­னர்.அறிக்­கை­யி­னைப் பார்­வை­யிட்ட நீதி­வான் பிர­தேச திடீர் சாவு விசா­ரணை அதி­காரி சீ.சீ.இளங்­கீ­ரன்

மூலம் சாவு விசா­ர­ணை­களை நடாத்தி அறிக்கை தாக்­கல் செய்­யு­மாறு பொலி­ஸா­ருக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டது எனத் தெரி­விக்­கப்­பட்­டது

Get real time updates directly on you device, subscribe now.

You might also like