யாழ் வடமராட்சியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஆபத்தான கட்டத்தில்

யாழ் வடமராட்சிப்பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் ஆபத்தான கட்டத்தில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இன்று மாலை 3.45 மணியளவில் கரணவாய் மூத்த விநாயகர் கோவிலுக்கு அருகில்- சோளங்கனிற்கு செல்லும் வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன், மின்கம்பத்துடன் மோதியதில் இந்த அனர்த்தம் இடம்பெற்றது.

சுமார் 22 வயது மதிக்கத்தக்க இளைஞன் வேகமாக சென்றதாகவும், அவர் நிதானமின்றி சென்றதாகவும் பிரதேச மக்கள் கூறுகிறார்கள்.

இப்பொழுதுதான் அவர் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்படுவதால், உடல்நிலை குறித்த மேலதிக தகவல்கள் பின்னர் வெளியிடப்படும்

Get real time updates directly on you device, subscribe now.

You might also like