இரு பிள்ளைகளின் தந்தை நுண்கடனால் தற்கொலை!

மேகராசா யோகராசா(26)இரு பிள்ளைகளின் தந்தை ஏற்கனவே 3நிறுவனங்களில் நுண்கடன் பெற்றநிலையில் மற்றுமொரு நுண்கடன் பெற கூட்டாக மூன்றுபேர் சேர்ந்தால்தான் கடன் கொடுப்பதாக நுண்கடன் நிறுவனங்களில் கொள்கையும் பெரிய வலைப்பின்னல் எல்லோரையும் கடனாளியாக்கும் திட்டத்திற்கு அமைய தமது மனைவியை கட்டாயப்படுத்த அவர் மறுப்பு தெரிவிக்க நேற்று மாலை தூக்கிட்டு பெறுமதிமிக்க உயிரைமாய்த்துள்ளார்.

ஏற்கனவே இவர் கூலித்தொலியாளியாக இருந்து மாதம்36ஆயிரம் ரூபா கடன் நிறுவனங்களுக்கு செலுத்துவருகின்றார்.நிரந்தர மற்ற தொழில் செய்யும் இவ் ஏழைக்கு ஆசை வார்த்தைகளை காட்டி கடன் பெற தேசிய அடையாளஅட்டை பிறப்பு சான்றிதழ் பிரதிகள் மற்றும் மூன்றுபேர் ஒருமித்த நிலையில் ஒப்பமிட்டால் நுண்கடன் வழங்கப்படுகின்றது.

#இதில் வேடிக்கை நுண்கடன் வழங்குவதற்கு இதுவரை பெறுபவர்களுக்கு பிணையாளிகளாக இரு அரசஉத்தியோகத்தர்களை எதிர்பார்த்தார்கள் ஆனால் நடந்ததோ???

பல அரசஉத்தியோகத்தர்கள் பிணையாளியாய் போய் கடைசில் தன்னுடைய மாதசம்பளத்தை இழந்து நீதிமன்றில் அலைந்ததால் அவற்றை கருத்தில் கொண்டு கடன்பெறுபவருக்கு பிணையாளியாக முன்னிற்கும் மனப்பான்மை இழந்தார்கள்.

இதனால் நுண்கடன் நிறுவனங்களின் மாயவலையில் விழும் அப்பாவிகள் குறைவடைய நிறுவனங்களின் வருவாய் குறைய பணத்திற்காக பிணத்தை பெறும் நிறுவனங்கள் சட்டதிட்டத்தை மிகவும் குறைத்து.

ஒவ்வொருவரிடம் எளிதாக கைவசம் கிடைக்கூடிய அடையாள அட்டை, பிறப்பு அத்தாட்சி பத்திர பிரதிகளையும் வாங்கி கடனை உடனடியாக கொடுக்கின்றார்கள்.

இதனால் கடன் பெறும் எமது தமிழ்கிராம ஏழைகள் நிறுவனங்களை நோக்கி படையெடுப்பது அதிகரித்துள்ளது. அதிலும் செங்கலடி பிரதேசபகுதி கிராமங்களில் இன்னமும் விழிப்புணர்வு பெறாத எம்மக்களை தேடிதேடி நுண்கடனை கொடுத்து பல ஆயிரம் குடும்பங்களை நடுத்தெருவிற்கு கொண்டு வருகின்றார்கள்.

#இதில் விசேடமாக கூறவேண்டியது இரு மாதம் முன் இறந்த 19வயது பிரதீபா வந்தாறுமூலை பெண்ணின் வயதையும் தொழிலையும் பார்க்காமல் 10இலட்சம் மேல் கடன் கொடுத்தார்கள் என்றால் பாருங்களன்.

ஏன் அப்படி கொடுக்கின்றார்கள்?? வயது போனவங்களுக்கு கடன் வழங்கும் நிறுவனம் எவ்வளவு கேவலமாக திட்டினாலும் பெரிசாக சூடுசொரணை வந்து அதெற்கு எதிரான எதிர்வினை நடைபெறாது ஏன் எனில் அவங்கட வயது அனுபவம்.

ஆனால் இளம் வயது ஆண்,பெண்ணுக்கு இப்படி திட்டினால் ஒன்று தம்முடைய காதில் கையில் இருக்கும் ஆபரணத்தை விற்று கடன் கட்டுவாங்க அதற்கு மேல போனால் தூக்குதான் ஒரே வழி இதைதான் மட்டக்களப்பில் நுண்கடன் நிறுவனங்கள் இளம் வயது தமிழ்சமூகத்தை எமனுக்கு பலிகொடுக்கின்றார்கள்.