நிலவின் துகள்களை நாசா அபகரிக்க பார்க்கிறது

தன்னிடம் இருக்கும் நிலவின் துகள்களை நாசா அபகரிக்க பார்க்கிறது என அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் வழக்கு பதிவு செய்துள்ளார்.

சின்சினாட்டியை சேர்ந்த லாரா சிக்கா என்பவர் நாசா எப்போதும் மக்களிடம் இருந்து பொருட்களை அபகரிப்பது போல தன்னிடம் இருந்து பொருட்களை அபகரிக்க போவதாக கூறி நியூயார்க் நீதி மன்றத்தில் நாசாவிற்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ள அவர் அதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளார்..

அமெரிக்காவை சேர்ந்த நீல் ஆம்ஸ்ட்ரோங்க், பஸ் ஆல்ட்ரின் ஆகியோர் அப்போலோ 11 மூலம் நிலவில் தரையிறங்கினர். இந்த நிலையில் பூமிக்கு திரும்பி வந்த ஆம்ஸ்ட்ரோங்க், நிலவில் இருந்து எடுத்து வந்த சில துகள்களை, சின்சினாட்டியை சேர்ந்த லாரா சிக்காவின் தந்தைக்கு பரிசளித்துள்ளார்.

நாசா உருவாக்கும் அருங்காட்சியகத்தில் வளிமண்டலப் பொருட்களை காட்சிப்படுத்த முடிவெடுத்துள்ளனர். இந்நிலையில் பலரிடம் வழக்கு தொடுத்து வின்வெளி பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.

சின்சினாட்டியை சேர்ந்த லாரா சிக்காவிடமும் அவர்கள் நிலவின் துகள்களை கேட்டுள்ளனர். இதற்கு லாரா சிக்கா மறுப்பு தெரிவித்துள்ளார். நிலவு என்பது நாசாவின் சொத்து கிடையாது எனக் குறிப்பிட்ட அவர். அது தன் தந்தைக்கு, ஆம்ஸ்ட்ரோங்க் கொடுத்த பரிசு. அது தனிநபர் சொத்து அதை நாசா கேட்க முடியாது என்றுள்ளார். இதனால் நிலவின் துகளை கைப்பற்ற முடியாமல் நாசா தினரி வருகிறது.