சுவிஸில் புலிகளுக்கு எதிரான வழக்கு.. “அனைவரும் குற்றவாளிகளென” இன்று அதிரடி தீர்ப்பு..!! (இன்று நடந்தது என்ன? வீடியோ)

சுவிட்சலாந்து நீதித்துறையின் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பாரிய வழக்கு என எதிர்பார்க்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்காக சுவிட்சர்லாந்தில் செயற்பட்ட WTCC எனும் உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாட்டாளர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் முடிவுற்று இன்று காலை 10.00 மணிக்கு Belinzona வில் அமைந்துள்ள சுவிட்சர்லாந்து குற்றவியல் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டு கொண்ண்டு இருக்கிறது..

குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதிகள் முன்னிலையில் குற்றஞ்சாட்டப்பட்ட WTCC உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாட்டாளர்கள் மற்றும் அவர்களின் வழக்கறிஞர்களின் அறிமுகத்துடன் பூர்வாங்க விசாரணைகள் ஆரம்பமாகி இன்று தீர்ப்பு வாசிக்கப்பட்டு கொண்டு இருக்கிறது.

வழக்கின் முக்கிய தீர்ப்பாக, விடுதலைப் புலிகள் அமைப்பானது, “பயங்கரவாத குற்றவியல் அமைப்பு” எனவும், இந்த அமைப்புக்காக சுவிஸ் வாழ் தமிழ் மக்களிடம் “பலாத்தகாரமாக நிதி சேகரித்தது” நிரூபிக்கப்பட்டு உள்ளது எனவும், அதனால் அனைவரும் குற்றவாளிகளாக இனங்காணப் பட்டுள்ளனர் எனவும்…

இதன் காரணமாக, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவிய குற்றச்சாட்டின் அடிப்படையில் 13 பேருக்கு சுவிட்சர்லாந்தில் 5 வருடம் சிறைத்தண்டனை விதிக்குமாறு கோரப்பட்டு இருந்த நிலையில், பன்னிரண்டு தமிழர்கள், மற்றும் ஒரு ஜெர்மனிய பிரஜை உட்பட பதின்மூன்று பேருக்கும் தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.

பதின்மூன்று பேருக்கும் பதினெட்டு மாதங்கள் முதல், ஆறரை வருட சிறைத்தணடனையும் வழங்கப்பட்டு உள்ளது..!

Get real time updates directly on you device, subscribe now.

You might also like