வேலணை மத்திய கல்லூரியின் மாணவர் விடுதியின் மலசல கூடத்திலிருந்து மாணவன் ஒருவன் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் வேலணை மத்திய கல்லூரியின் மாணவர் விடுதிப் பகுதியிலிருந்து மாணவன் ஒருவன் சடலமாக நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளான்.

வேலணை மத்திய கல்லூரியில் தரம் 09 இல் கல்விகற்கும் மயூரன் மதுபன் (வயது 14) என்ற மாணவரே கல்லுரியின் மாணவர் தங்குமிட விடுதியின் மலசலகூடம் ஒன்றில் கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.

இன்று இரவு எட்டு மணிக்கும் ஒன்பது மணிக்குமிடைப்பட்ட பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

உரும்பிராய் மேற்கு செல்வபுரத்தை நிரந்தர வசிப்பிடமாகவும் யூலியன்குளம், கோணாவலி, கிளிநொச்சியை தற்காலிக முகவரியாகவும் கொண்ட குறித்த மாணவனின் தாயார் இறந்துவிட தாந்தையார் பிறிதொரு திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் இரண்டாவது மனையிவின் குழந்தையுடன் குறித்த சிறுவனையும் வளர்ப்பதில் வறுமைகாரணமாக சிரமம் என சிறுவன் நன்னடத்தை அதிகாரிகள் ஊடாக குறித்த பாடசாலையில் கடந்த ஏப்ரல் மாதம் வேலணை மத்திய கல்லுரியின் விடுதியில் சேர்க்கப்பட்டுள்ளான்.

விடுதியில் தங்கியிருந்து படிக்கவேண்டும் என்ற குறித்த மாணவனின் விருப்பின் பேரிலேயே அங்கு அனுமதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் வழமைபோல மாணவர் விடுதியில் இன்றிரவு இரவு 07 மணியளவில் தேனீர் அருந்திவிட்டு மாணவன் சென்றுள்ளதாகக் கூறப்படுகின்றது. சுமார் இரவு 08.30 மணியளவில் ஏனைய மாணவர்கள் மலசலகூடத்திற்குச் சென்றபோது கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் குறித்த மாணவன் சடலமாக கிடப்பதை அவதானித்து விடுதிப் பொறுப்பதிகாரியிடம் தெரிவித்துள்ளனர்.

மாணவனின் மரணம் குறித்த சம்பவத்தை அறிந்த பாசாலை அதிபர், ஆசிரியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசாரும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

மாணவன் சுருக்கிட்ட நிலையில் காணப்படும் புகைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில் மாணவனின் மரணம் தொடர்பில் சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ளன

Get real time updates directly on you device, subscribe now.

You might also like