தொடருந்து முன் பாய்ந்த காதல் ஜோடி- – பின்னனியைக் கேட்ட பொலிஸார் அதிர்ச்சி!!

காலி, ஹபராதுவ – ஹடிவத்த பிரதேசத்தில் 28 வயதுடைய பெண் ஒருவரும், 54 வயதுடைய ஆணொருவரும் புகையிரதம் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளனர். நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இவர்கள் கொழும்பு கோட்டையிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்து கொண்டிருந்த புகையிரதத்தின் முன் குதித்து இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

உயிரிழந்த குறித்த பெண் ஒரு பிள்ளையின் தாயார் எனவும், ஆண் இரு பிள்ளைகளின் தந்தை எனவும் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த பெண் ஆடைத் தொழிற்சாலையொன்றில் வேலைக்குச் சென்று வந்த நிலையில், ஆட்டோ சாரதியான 54 வயதுடைய குறித்த ஆணுடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தகாத உறவு காரணமாகவே இருவரும் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபராதுவ பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்

Get real time updates directly on you device, subscribe now.

You might also like