பொட்டு அம்மான் உயிருடன்? சுப்பிரமணியன் சுவாமியின் கருத்தினால் பெரும் பரபரப்பு!!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான குற்றவாளி இத்தாலியில் இருக்கிறார் என பா.ஜ.கவின் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்த கருத்தால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.இவர் கூறிய அந்த முக்கிய குற்றவாளி பிரபாகரனா? அல்லது பொட்டு அம்மனா? என்ற கேள்வி எழுந்தது.இந்த நிலையில் 2010ஆம் ஆண்டு பொட்டு அம்மான் பற்றி புலிகள் இயக்க உளவுப் பிரிவைச் சேர்ந்த சிரஞ்சீவி மாஸ்டர் தெரிவித்த கருத்து தற்போது வைரலாகி வருகின்றது.

அதாவது ‘தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவு பொறுப்பாளர் பொட்டு அம்மான் பாதுகாப்பாக இருக்கின்றார்’ என்று 2010ஆம் ஆண்டு சென்னையில் கைது செய்யப்பட்ட புலிகள் இயக்க உளவுப் பிரிவைச் சேர்ந்த சிரஞ்சீவி மாஸ்டர் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.ஈழ யுத்தம் முடிந்த 2009ஆம் ஆண்டு முதல் பொட்டு அம்மான் உயிரோடுதான் இருக்கிறார் என பல முறை செய்திகள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. இதனால் சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிட்டுச் சொல்வது பொட்டு அம்மானைத்தான் என்ற கருத்துகள் வழுப்பெற்றுள்ளன.

2010ஆம் ஆண்டு ஜூன் மாதம் புலிகள் உளவுப் பிரிவைச் சேர்ந்த சிரஞ்சீவி மாஸ்டர் கைது செய்யப்பட்ட போது அவரிடம் இந்திய வார இதழில் அவருடைய நேர்காணல் ஒன்று வெளிவந்தது.அந்த நேர்காணலின் குறித்த பகுதியை தற்போது இந்திய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.

அதில் கேட்கப்பட்ட கேள்விகளும் பதில்களும் பின்வருமாறு;

கேள்வி: பிரபாகரன் தப்பி விட்டதாக ஈழ ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். ஆனால், அவர் கொல்லப்பட்டு விட்டதாக சொல்லி சிங்கள அரசு ஒரு சடலத்தை காட்டியது. இதில் எதுதான் உண்மை?

பதில்: எங்களின் தலைமையைக் கேட்காமல் நாங்கள் எதும் சொல்ல முடியாது. அதே நேரம் இட்டுக்கட்டி எதும் சொல்ல நாங்கள் விரும்பவில்லை.

கேள்வி: உங்களின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானின் நிலை குறித்தாவது சொல்லுங்களேன்.

பதில்: மிகப்பத்திரமாக இருக்கிறார். அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை. என்று சிரித்துக்கொண்டே கூறியுள்ளார்.

இந்த நிலையில், சுப்பிரமணியன் சுவாமி இப்போது மறைமுகமாக கோடிட்டுக் காட்டுவது பொட்டு அம்மானையா? என இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.