மானிப்பாய் அந்தோனியார் சொரூபம் வீழ்ந்து உடைந்தது – கதறி அழுத பக்தர்கள்!

மானிப்­பாய் அந்­தோ­னி­யார் ஆலய தேர்ப் பவ­னி­யின் ­போது என்­பன நேற்­றுத் திடீ­ரென்று வீழ்ந்து உடைந்­துள்­ளது.

இந்­தச் சம்­ப­வத்­தால் பக்­தர்­கள் கதறி அழு­த­னர். இந்­தச் சம்­ப­வத்­தால் அவர்­க­ளி­டம் மனக்­கி­லே­ச­மும் ஏற்­பட்­டது.

மானிப்­பாய் அந்­தோ­னி­யார் ஆல­யத் தேர்ப் பவனி நேற்று இடம்­பெற்­றது. தேரில் அந்­தோ­னி­யார் மற்­றும் குழந்தை யேசு­வின் சொரூ­பம் என்­பன எடுத்­து­வ­ரப்­பட்­டன.

தேர்ப் பவ­னி­யின் இறு­திக் கட்­டத்­தில், ஆல­யத்­தின் பிர­தான வாயில் ஊடா­கத் தேர் உள்­நு­ழை­யும்­போதே அந்­தோ­னி­யார் மற்­றும் குழந்தை யேசு­வின் சொரூ­பங்­கள் வீழ்ந்து உடைந்­துள்­ளன. அவற்­றின் தலைப் பகுதி மாத்­தி­ரமே வீழ்ந்து உடைந்­துள்­ளது.

வீதி­யில் உள்ள இறக்­கம் கார­ண­மா­கவே தேர் சரிந்து, இவை வீழ்ந்து உடைந்­த­தா­கத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. உட­ன­டி­யா­கவே, சொரூ­பங்­கள் ஆல­யத்­தி­னுள் எடுத்­துச் செல்­லப்­பட்­டன.

இதன் பின்­னர் ஆல­யத்­தி­னுள் இருந்த மற்­றொரு சொரூ­பம் கொண்­டு­வ­ரப்­பட்டு ஆசீர்­வா­தம் வழங்­கப்­பட்­ட­போ­தும், பக்­தர்­கள் பெரும் சோகத்­து­ட­னேயே வெளி­யே­றி­னர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like