பிக்பாஸ் வீட்டில் நுழைந்ததும் பொன்னம்பலம் செய்த வேலை! விளாசும் நெட்டிசன்கள்

கஸ்தூரி விஷயம் தற்போது தான் அடங்கியுள்ள நிலையில் பொன்னம்பலம் புதுப் பிரச்சனையை கிளப்பியுள்ளார்.

பிக் பாஸ் 2 நிகழ்ச்சி நேற்று துவங்கியுள்ளது. 100 நாட்களுக்கு பொழுதுபோக்கிற்கு பஞ்சமே இருக்காது. அவர்கள் பிக் பாஸ் வீட்டில் செய்யும் காரியங்களை பார்க்கவே பார்வையாளர்கள் சரியான நேரத்தில் நிகழ்ச்சியை பார்த்துவிடுவார்கள்.முதல் நாளே கலவரத்துடன் நிகழ்ச்சி துவங்கியுள்ளது.

சீனியரான பொன்னம்பலம் நானும் யூத் தான் என்று சொல்வது போன்று டைட்டாக டி-ஷர்ட், ஷார்ட்ஸ் அணிந்து பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார். அதுவும் ஜெய் ஸ்ரீ ராம் என்று வேறு சொல்லியுள்ளார். எந்த தைரியத்தில் பொன்னம்பலம் அப்படி சொல்லிவிட்டு பிக் பாஸ் வீட்டில் நிலைத்து நிற்கலாம் என்று நினைக்கிறார் என்ற விவாதம்

ஆண், பெண் என்றால் என்ன என பொன்னம்பலம் யாஷிகாவுக்கு விளக்கிவிட்டு இரண்டும் கெட்டான வந்துடுச்சுன்னா என்ன பண்ணுவீங்க என்று கேட்டுள்ளார். அவர் பேசி முடித்தவுடன் ஜனனி ஐயர் வந்ததை பார்த்து யாஷிகா பெண் என்று கண்டுபிடித்துவிட்டார். சபாஷ் யாஷிகா.

18 எம்.எல். ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு தொடர்பாக நடிகை கஸ்தூரி திருநங்கைகளின் புகைப்படங்களுடன் ட்வீட்டி சர்ச்சையில் சிக்கினார். இந்நிலையில் இரண்டும் கெட்டான் பற்றி பேசிய பொன்னம்பலத்தை பார்வையாளர்கள் சமூக வலைதளங்களில் விளாசியுள்ளனர்.

ஜனனி ஐயர் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்ததும் வராததுமாக சிறையை பற்றி தான் கேட்கிறார். ஜனனி வந்ததும் மகத் அவரை கட்டிப்பிடிக்க பொன்னம்பலமோ கட்டிப்பிடி வைத்தியம் எல்லாம் நாங்கள் பண்ணுவோம் என்கிறார். அந்த கட்டிப்பிடி வைத்தியத்தை கற்றுக் கொடுத்த அப்பனே வீட்டிற்கு வெளியே இருந்து உங்களை கண்காணிக்கிறார் பொன்னம்பலம்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like