சாரதியின் தவறால் யாழ்.மாவட்ட செயலகத்தில் புகுந்த ஹன்டர் வாகனம் (படங்கள் , வீடியோ)

சாரதியின் தவறால் ஹன்டர் வாகனம் வேக்க்கட்டுப்பாட்டையிழந்து யாழ்.மாவட்ட செயலகத்தின் வாகனத் தரிப்பிடத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த உத்தியோகத்தர்களின் 12 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 2 துவிச்சக்கர வண்டிகள் முற்றாகச் சேதமடைந்தன.

இந்தச் சம்பவம் இன்று (19) செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் இடம்பெற்றது. யாழ்.மாவட்ட செயலகத்துக்கு ஹன்டர் வாகனம் ஒன்றில் பொருள்கள் ஏற்றிவரப்பட்டன.

உத்தியோகத்தர்களின் வாகனத்தரிப்பிடத்துக்கு அருகின் ஹன்டர் வாகனத்தை நிறுத்த சாரதி திட்டமிட்டுள்ளார். வாகனத்தின் பிரேக்கை அமர்த்துவதற்கு பதிலாக அச்சிலேற்றரை சாரதி மாற்றி அழுத்தியதால் வாகனம் வேகக் கட்டுப்பாட்டையிழந்து உத்தியோகத்தர்களின் வாகனத் தரிபிடத்துக்குள் புகுந்தது.

சாரதியின் கவயீனத்தால் இந்த விபத்து ஏற்பட்டது. உத்தியோகத்தர்களின் 12 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 2 துவிச்சக்கர வண்டிகள் முற்றாகச் சேதமடைந்தன. அவற்றில் பல பெண் உத்தியோகத்தர்களின் மோட்டார் சைக்கிள்கள்” என்று தெரிவிக்கப்படுகிறது

யாழ்.மாவட்ட செயலகத்திற்கு பொருட்கள் ஏற்றி வந்த ஹன்ரர் ரக வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் பத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் விபத்துக்குள்ளாகின.
யாழ்.மாவட்ட செயலக வளாகத்தில் இன்று மாலை (19) 4.30 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றது.

இந்த ஹன்ரர் ரக வாகனம்இ மாவட்ட செயலகத்திற்கு தேவையான உபகரணங்களை ஏற்றி வந்து உபகரணங்களை இறக்கிவிட்டுஇ புறப்பட தயராகிய வேளையிலேயே வேகக்கட்டுப்பாட்டினை இழந்துஇ மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் தமது வாகனங்களை நிறுத்தி வைக்கும் தரிப்பிடத்திற்குள் புகுந்ததினால்இ பத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன.

சம்பவ இடத்திற்கு யாழ்ப்பாணம் பொலிஸார் வருகை தந்து பார்வையிட்டதுடன்இ விபத்து தொடர்பாகவும்இ விசாரணைகளை மேற்கொண்டனர்.