வவுனியாவில் 2மாதமாக மகனை தொலைத்து தேடிவரும் பெற்றோர்-காண்பவர்கள் தொடர்பு கொள்ளவும்!

வவுனியாவில் 21 வயது இளைஞனைக்காணவில்லை என முறைப்பாடு
வவுனியா நெடுங்கேணி, சேனைப்புலவு பகுதியில் 21வயதுடைய இளைஞன் ஒருவரைக்காணவில்லை என்று நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 17.05.2018 அன்று காலை 10.30மணியளவில் நெடுங்கேணி சேனைப்புலவு பகுதியிலிருந்து மோட்டார் சைக்கிலில் கடைக்குச் சென்று வருவதாக தெரிவித்து விட்டுச் சென்ற 21வயதுடைய இராஜகோபால் கஜமுகன் என்ற இளைஞன் வீடு திரும்பாததையடுத்து இளைஞனின் தாயாரினால் நெடுங்கேணிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும் கடந்த மாதம் 23ஆம் திகதி இளைஞனின் மோட்டார் சைக்கிள் வீட்டிற்கு சற்றுத்தொலைவிலிருந்து மீட்கப்பட்டுள்ளதுடன் அதைப் பொலிசார் நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இன்று வரையில் குறித்த இளைஞன் தொடர்பாக எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என்று தெரிவித்து குறித்த இளைஞனின் தாயார் வன்னிப்பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்குக் இன்று கொண்டுவரப்பட்டுள்ளதாக இளைஞனின் தாயார் தெரிவித்துள்ளார்.

இளைஞன் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் 0772143891 அல்லது 0772054106 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்கவும்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like