வீடு புகுந்து பள்ளி ஆசிரியையைக் கத்தியால் சராமரியாகக் குத்திய மர்ம நபர்..!

தேனி மாவட்டம், போடி சந்தைப்பேட்டை தெருவைச் சேர்ந்தவர் மாலதி (வயது 43). இவர் திருமலாபுரத்தில், உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாகப் பணி புரிந்து வருகிறார்.

இவரது கணவர் பெயர் சங்கர நாராயணன். இவர் மதுரையில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

நேற்று காலை, மாலதி பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருந்தார். அப்போது, ஒரு மர்ம நபர், வீட்டுக் கதவைத் தட்டி உள்ளார்.

சத்தம் கேட்டு, கதவைத் திறந்தார் மாலதி. கதவைத் திறந்தவுடன், கையில் கத்தியுடன் நின்றிருந்த அந்த மர்ம நபர், கத்தியால், மாலதியின் தலையிலும், முதுகிலும் சரமாரியாகக் குத்தி விட்டு, தப்பி ஓடி விட்டார்.

இதனால், ரத்த வெள்ளத்தில், மாலதி அலறி மயங்கி சாய்ந்தார். அருகில் இருந்தவர்கள், மாலதியை, தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போடி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மாலதி குடியிருந்த வீட்டின் அருகே உள்ள ஒரு ஓட்டலில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிந்திருக்கும் காட்சிகளை வைத்து, கத்தியால் குத்திய மர்ம நபர் யார் என்பதை, விரைவில் கண்டு பிடித்து விடுவோம், என்று போலீசார் கூறி உள்ளனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like