விஜய் பிறந்தநாளன்று ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி

நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் பரிசாக அவர் நடித்து வரும் புதிய படத்தின் தலைப்பை வெளியிட உள்ளனர். மெர்சல் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடித்து வரும் 62- ஆவது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். இதற்கு முன்பு துப்பாக்கி, கத்தி ஆகிய இரண்டு வெற்றி படங்களில் இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். காமெடி கதாபாத்திரத்தில் யோகிபாபு, வில்லன் கேரக்டரில் ராதாரவி, பழ.கருப்பையா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். மெர்சல் படத்திற்கு பிறகு இதிலும் ஏ.ஆர்.ரஹ்மானே இசையமைக்கிறார். சன்பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

விவசாயம் சார்ந்த அரசியல் பின்னணியில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையை சுற்றி பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. படத்திற்கு இன்னும் பெயர் வைக்காத நிலையில், கலப்பை எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like