பந்தைச் சேதப்படுத்தினார் சந்திமல் ஓர் ஆட்டத்தில் விளையாடத் தடை

மேற்கிந்­தி­யத் தீவு­ க­ளுக்கு எதி­ரான இரண்­டா­வது டெஸ்ட் ஆட்­டத்­தில் இலங்கை அணி­யின் தலை­வர் சந்­தி­மல் பந்­தைச் சேதப்­ப­டுத்­திய குற்­றச்­சாட்டை ஏற்­றுக் கொண்­டார். இதை­ய­டுத்து அவ­ருக்கு உட­ன­டி­யாக நடை­மு­றைக்கு வரும் வகை­யில் ஓர் டெஸ்ட் ஆட்­டத்­தில் விளையாடத் தடை விதித்­தது பன்­னாட்டு கிரிக்­கெட் சபை.

இந்த ஆட்­டம் கடந்த 14ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை நடை­பெற்­றது. ஆட்­டத்­தின் இரண்­டாம் நாளில் இலங்கை வீரர்­கள் பந்­தைத் திட்­ட­மிட்­டுச் சேதப்­ப­டுத்­தி­னார்­கள் என்ற குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப் பட்­டது. ஆனால் இலங்கை அணி­யின் வீரர்­களோ அல்­லது இலங்கை கிரிக்­கெட் அணி­யின் அதி­கா­ரி­களோ இந்­தக் குற்­றச்­சாட்டை ஏற்­றுக்­கொள்­ள­வில்லை.

அதி­லும் தம்­மீது பொய் குற்­றச் சாட்டு சுமத்­தப்­ப­டு­வ­தா­கத் தெரி­வித்து ஆட்­டத்­தின் மூன்­றாம் நாளின்­போது சுமார் இரண்டு மணி­நே­ரம் களத்­த­டுப்­பைப் புறக்­க­ணித்­த­னர் இலங்கை அணி­யின் வீரர்­கள். இந்த நிலை­யில் ஆட்­டம் முடிந்த பின்­னர் சந்­தி­ம­லி­டம் நடத்­திய விசா­ர­ணை­யின் போது அவர் குற்­றத்தை ஏற்­றுக்­கொண்­டார் என்று ஐ.சி.சி. அறி­வித்­துள்­ளது.

‘முத­லில் தன் மீதான குற்­றச்­சாட்டை சந்­தி­மல் நிரா­க­ரித்­தார். பின்­னர் சந்­தி­மல் பந்­தைச் சேதப்­ப­டுத்­தும் காணொ­லி­யைக் காட்­டி­ய­தும் தனது குற்­றத்தை ஏற்­றுக்­கொண்­டார்’’ என்று ஐ.சி.சி. குறிப்­பிட் டுள்­ளது.

ஆனால், ஆரம்­பத்­தில் தங்­க­ளின் அணி வீரர்­கள் எந்­த­வி­த­மான தவ­றி­லும் ஈடு­ப­ட­மாட்­டார்­கள் என்று வீராப்­புப் பேசிய இலங்கை அணி நிர்­வா­கம் தற்­போது, வேறு­மா­தி­ரி­யா­கப் பேசு­கி­றது. அதா­வது ‘‘ஆட்­டம் தொடங்­கும் 10 நிமி­டங்­க­ளுக்கு முன் வந்து பந்தை சேதப்­ப­டுத்­தி­விட்­ட­தாக நடு­வர்­கள் எங்­க­ளி­டம் முறைப்­பாடு தெரி­வித்­த­னர். இதை ஏற்க முடி­யாது’’ எனத் தெரி­வித்­த­னர்.

ஆனால், இலங்கை கிரிக்­கெட் சபை இது குறித்து எந்­த­வி­த­மான கருத்­தும் இது­வரை தெரி­விக்­க­வில்லை. இந்­தத் தண்­ட­னையை எதிர்த்து மேன்மு­றை­யீடு செய்ய சந்­தி­ம­லுக்கு 48 மணி­நே­ரம் அவ­ கா­சம் இருக்­கி­றது. ஆனால், குற்­றச்­சாட்டு ஒப்­புக்­கொள்­ளப்­பட்ட நிலை­யில், சந்­தி­மல், பயிற்­சி­யா­ளர், அணி மேலா­ளர் ஆகி­யோர் மீது இலங்கை கிரிக்­கெட் சபை கடும் நட­வ­டிக்கை எடுக்க முடிவு செய்­துள்­ள­தா­கத் தெரி­கி­றது.

இலங்­கை­யின் கிரிக்­கெட் மதிப்பை, மாண்பை கெடுக்­கும் வகை­யில் செயற்பட்ட சந்­தி­மல் ஜூலை மாதம் தென்­னா­பி­ரிக்­கா­வுக்கு எதி­ரான டெஸ்ட் தொடர் முழு­வ­தும் நீக் கப்­ப­ட­லாம், ஒரு­நாள் தொட­ரில் இருந்­தும் நீக்க ஆலோ­சித்து வரப்­ப­டு­வ­தா­கச் செய்­தி­கள் வந்­துள்­ளன.

முன்­ன­தாக ஆஸ்­தி­ரே­லிய அணி­யின் முன்­னாள் தலை­வர் சிமித், முன்­னாள் உப­த­லை­வர் வோர்­ணர் இரு­வ­ரும் தென்­னா­பி­ரிக்­கா­வுக்கு எதி­ரான தொட­ரில் பந்­தைத் திட்­ட­மிட்­டுச் சேதப்­ப­டுத்­தி­ய­மைக்­காக ஆஸ்­திரே­லிய கிரிக்­கெட் சபை தலா ஒவ்­வொரு வரு­டம் தடை விதித்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. (ம)