யாழ். வீதிகளில் தென்படும் பேய், பூதங்கள்….!! உண்மையில் நடப்பது என்ன?

பேய், பூதம் தொடர்பில் பொய் பிரச்சாரம் செய்ய வேண்டாம் என யாழ். ஊடகங்களிடம் சுகாதாரப் பிரிவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.யாழ்ப்பாணத்தின் பல இடங்களில் இரவில் அமானுஸ்ய சக்திகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும், அவை வீதிகளில் ஆங்காங்கே தென்படுவதாகவும் யாழ். ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.ஒரு கையில் இரத்தம் வழியும் கறுப்பு சேவல் ஒன்றை தாங்கியவாறு வெள்ளை உடையணிந்த பெரிய உருவமொன்று உலவுவதாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

சாதாரண மனிதர்களை விடவும் இந்த பேய் உயரமானது எனவும், கடந்த காலங்களில் வீடுகளில் தென்பட்ட பூதம் தற்போது வீதிகளிலும் தென்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த அமானுஸ்ய சக்தி தொடர்பில் செய்தி வெளியிட்ட யாழ்ப்பாண ஊடகங்களிடம் மாகாண சுகாதார அதிகாரிகள், இவ்வாறு பிரச்சாரம் செய்ய வேண்டாம் என கோரியுள்ளனர்.

அத்துடன், பேய்கள் மற்றும் பூதங்கள் என்று எதுவும் கிடையாது எனவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.எனினும், யாழில் உலவி வரும் பேய் பூதம் தொடர்பிலான புகைப்படங்களை ஊடகங்கள் வெளியிட்டிருந்த நிலையில் யாழ். ஊடகங்கள் மீது சுகாதார அதிகாரிகள் அழுத்தங்களை பிரயோகிப்பதனை நிறுத்திக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like