ஊழியர்களின் சம்பளப் பிரச்சினை – பிக்பாஸ் நிகழ்ச்சி இடைநிறுத்தம்!!

ஊழியர்களின் ஊதியப் பிரச்சினை காரணமாக பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ”பிக் பாஸ்” நிகழ்ச்சியின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக என்று தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ”பிக் பாஸ் 1” நிகழ்ச்சி மாபெரும் வெற்றி பெற்றது. சினிமாவில் காணாமல் போயிருந்த ஓவியா இந் நிகழ்ச்சியின் மூலம் மக்களின் மனதில் இடம்பிடித்தார். அதே போல் ஜூலி, ரைசா, ஹரிஸ் உள்ளிட்ட பலர் சினிமா வாய்ப்பு பெற்றனர்.

இந்த நிலையில், இந்த நிகழ்ச்சியின் 2 ஆவது சீசன் தற்போது ஒளிபரப்பப்பட்டுக் வருகின்றது. இதற்காக பூந்தமல்லியில் உள்ள ஈவிபி பொழுதுபோக்கு பூங்காவில் பிரம்மாண்ட செட் போட்டு 16 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சி ஒருவாரம் கூட முழுமையாக நடைபெறாத நிலையில், ஃபெப்சி ஊழியர்களின் ஊதிய பிரச்சினை காரணமாக இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பு வேலைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், தற்போதைக்கு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக மட்டும் செய்தி வெளியாகியுள்ளன. இது குறித்து விரிவான தகவல் வெளியிடப்படவில்லை.

அதனால் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து 100 நாள் நடத்தப்படுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like