திடீர் மூச்­சுத்­தி­ண­ற­லால் -உயிரிழந்த இளை­ஞன்!!

படுத்­து­றங்­கி­ய­போது ஏற்­பட்ட மூச்­சுத்­தி­ண­ற­லால் இளை­ஞன் ஒரு­வர் உயி­ரி­ழந்­துள்­ளார். இளை­ஞ­னின் உடற்­கூ­று­கள் பரி­சோ­த­னைக்­கா­கக் கொழும்புக்கு அனுப்­பப்­பட்­டுள்­ளன.

அகி­ல­கு­மார் நில­வன் (வயது–-20) என்­ப­வரே உயி­ரி­ழந்­துள்­ளார். இவர் முச்­சக்­கர வண்­டிச் சாரதி.

திரு­மண நிகழ்­வொன்­றுக்­குச் சென்று விட்டு வீடு திரும்­பிய அவர் படுத்­து­றங்­கச் சென்­றுள்­ளார். அவ­ருக்கு மூச்­சுத் திண­றல் ஏற்­பட்­டுள்­ளது.

கோப்­பாய் மருத்­து­வ­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­டுள்­ளார். எனி­னும் சிகிச்சை பய­னின்றி உயி­ரி­ழந்­துள்­ளார்.

அவ­ரது உடல் யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது.

திடீர் இறப்பு விசா­ரணை அதி­காரி ந.பிறே­ம­கு­மார் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டார். உயி­ரி­ழப்­புக்­கான கார­ணம் தொடர்­பில் கண்­ட­றிய உடற்­கூ­று­கள் கொழும்­புக்கு அனுப்­பப்­பட்­டுள்­ளன.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like