சுழிபுரம் சிறுமி- வன்கொடுமைக்குள்ளாக்கி கழுத்து நெரித்துக் கொலை!!

சுழி­பு­ரம், காட்­டுப்­பு­லத்­தில் கிணற்­றில் இருந்து மீட்­கப்­பட்ட சிறுமி கழுத்து நெரிக்­கப்­பட்­டுக் கொலை செய்­யப்­பட்­டுள்­ளார்.

சிறுமி பாலி­யல் வன்­பு­ணர்­வுக்கு உள்­ளாக்­கப்­ப­டா­த ­போ­தும், பாலி­யல் வன்­கொ­டு­மைக்கு உள்­ளாக்­கப்­பட்­டுள்­ளார் என்று உடற்­கூற்­றுச் சோத­னை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

காட்­டுப்­பு­லம் அர­சி­னர் தமிழ்க் கல­வன் பாட­சா­லை­யில் தரம் 1 இல் கற்­கும் சி.றெஜீனா (வயது–-6) என்ற சிறுமி நேற்­று­ முன்­தி­னம் கிணற்­றில் இருந்து மீட்­கப்­பட்­டார். அவ­ரது கழுத்து நெரிக்­கப்­பட்­ட­மைக்­கான அடை­யா­ளம் காணப்­பட்­டது. காதில் இருந்த தோடு­கள் காணா­மல் போயி­ருந்­தன.

பாட­சா­லை­யில் இருந்து நேற்­று­முன்­தி­னம் மதி­யம் ரெஜீனா வீடு திரும்­பி­யி­ருந்­தார். ரெஜீ­னா­வின் தாய் சமுர்த்தி வங்­கிக்­குச் செல்ல வேண்­டி­யி­ருந்­தது. அங்கு சென்­று­விட்டு பிற்­ப­கல் 3 மணிக்கு திரும்­பி­ய­போது றெஜீ­னா­வைக் காண­வில்லை.

தனது சகோ­த­ரி­யின் வீட்­டுக்­குச் சென்­றி­ருக்­க­லாம் என்று நினைத்த றெஜீ­னா­வின் தாய் அங்கு சென்­றார். அங்­கும் றெஜீனா இல்லை. உற­வி­னர்­க­ளும், அய­ல­வர்­க­ளும் றெஜீ­னா­வைத் தேடத் தொடங்­கி­னர்.

நீண்ட நேரத் தேடு­த­லின் பின்­னர் கிண­றொன்­றில் சிறு­மி­யின் உடல் இருப்­பது அறி­யப்­பட்­டது. இது தொடர்­பில் வட்­டுக்­கோட்­டைப் பொலி­ஸா­ருக்கு அறி­விக்­கப்­பட்­டது.

வட்­டுக்­கோட்­டைப் பொலி­ஸார் உட­ன­டி­யா­கச் சம்­பவ இடத்­துக்கு வந்­த­னர். கிணற்­றுக்­குள் இருந்து சிறு­மி­யின் உடல் வெளியே எடுக்­கப்­பட்­டது.

சிறு­மி­யின் பாட­சா­லைச் சீரு­டை­யைக் காண­வில்லை. சட­லம் உள்­ளா­டை­யு­டன் மட்­டும் இருந்­தது. காதில் இருந்த தோடு­க­ளை­யும் காண­வில்லை. சிறு­மி­யின் கழுத்­தில் கயிற்­றால் இறுக்­கி­யது போன்ற அடை­யா­ளம் தெரிந்­தது.

இரவு 7 மணி­ய­ள­வில் மல்­லா­கம் நீதி­வான் சம்­பவ இடத்­துக்­குச் சென்­றார். சட­லத்­தைப் பார்­வை­யிட்­டார். விசா­ர­ணை­கள் மேற்­கொண்­டார்.

உடற்­கூற்­றுச் சோத­னைக்­காக உடலை யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் ஒப்­ப­டைக்க உத்­த­ர­விட்­டார்.

நேற்று யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­னை­யில் உடற்­கூற்­றுச் சோதனை நடத்­தப்­பட்­டது. சட்­ட­ம­ருத்­துவ நிபு­ணர் உ.மயூ­ர­தன் தலை­மை­யில் உடற்­கூற்­றுச் சோதனை நடத்­தப்­பட்­டது.

சிறு­மி­யின் கழுத்து கயிற்­றால் இறுக்­கப்­பட்­ட­மை­யால் அவர் உயி­ரி­ழந்­துள்­ளார். அவ­ரது உட­லில் நகக் கீறல்­கள் காணப்­ப­டு­கின்­றன.

சிறுமி பாலி­யல் வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. ஆனால் பாலி­யல் வன்­கொ­டு­மைக்கு ஆளா­கி­யுள்­ளார் என்று உடற்­கூற்­றுச் சோத­னை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.

உடற்­கூற்­றுச் சோத­னை­க­ளின் பின்­னர் சட­லம் நேற்­றுப் பிற்­ப­கல் உற­வி­னர்­க­ளி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like