வவுனியாவில் ஏழை மாணவிக்கு பாடசாலையில் நடந்த அநீதி..!

வவுனியாவில் தந்தையற்ற நிலையில் தாயின் அரவணைப்பில் வாழும் மாணவிக்கு பிரபல பாடசாலைகளில் புறக்கணிக்கப்படுகின்றாரா?
வவுனியாவில் கற்குழியில் தந்தையற்ற நிலையில் தாயின் அரவணைப்பில் வாழும் வசித்து வரும் சன்முகஆனந்தம் நிதர்சினி 17 வயதுடைய பாடசாலை மாணவிக்கு வவுனியா பிரபல பாடசாலைகளில் அநீதி இடம்பெற்றுள்ளது.

வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையில் குறித்த மாணவி கல்வி கற்று வந்துள்ளார். இதன் போது பழுதூக்குதல் போட்டியில் ஆர்வமுடையவர் என்பதனால் அவரது பாடசாலையின் விளையாட்டு பொறுப்பாசிரியர் அந்த மாணவிக்கு பயிற்சிகளை வழங்கி வந்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னர் தனக்கு நேரமின்மையினால் அவ் மாணவியை தனியார் உடற்பயிற்சி நிலையத்திற்கு சென்று பயிற்சினை பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து தாண்டிக்குளத்தில் அமைந்துள்ள பிரபல உடற்பயிற்சி நிலையத்திற்கு மாணவியின் தாயார் சென்று தனது மகளிற்கு பழுதூக்குதல் பயிற்சி வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கு உடற்பயிற்சி நிலையத்தில் பயிற்றுவிற்பாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஆண்கள் பயிற்சி பெறும் நிலையத்தில் பெண்கள் பயிற்சி பெறுவதை விரும்பவில்லை . பின்னர் மாணவியின் மாகாண மற்றும் தேசிய மட்ட சான்றிதழ்கள் , பதக்கங்களை பார்வையிட்டதன் பின்னர் அவர் பயிற்சினை வழங்குவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் அவ் மாணவி தனியார் உடற்பயிற்சி நிலையத்தில் பயிற்சிகளை பெற்று சுமார் 60கிலோ எடையினை தூக்கும் ஆற்றலை பெற்றுள்ளார். தேசிய மட்டத்திற்கு மாணவி சென்ற சமயத்தில் மாணவி கல்வி கற்ற பாடசாலையின் உடற்பயிற்சி பொறுப்பாசிரியர் 55கிலோ எடையினையே தூக்குமாறு பணித்துள்ளார். குறித்த மாணவி 60 கிலோ எடையினை தூக்கியிருந்தால் தேசிய மட்டத்தில் மூன்றாவது இடத்தினை பெற்றிருப்பார்.

திறந்த விளையாட்டு போட்டி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. ஆனால் அந்த மாணவியின் நண்பிகளுக்கு பாடசாலையின் உடற்பயிற்சி பொறுப்பாசிரியர் செல்லுமாறு தெரிவித்துள்ளார். ஆனால் குறித்த மாணவிக்கு தெரிவிக்கவில்லை

இதனை கேள்வியுற்ற மாணவியின் தாயார் பொறுப்பாசிரியருடன் தொலைபேசி மூலம் கலந்துரையாடியுள்ளார். இதன் போது நான் செல்லவில்லை உங்களுக்கு விரும்பமில்லை என்றால் செல்ல வேண்டாமென காட்புணர்சியுடன் தெரிவித்துள்ளார்.

பின்னர் மாணவி யாழ்ப்பாணத்திற்கு சென்று பழுதூக்குதல் போட்டியில் கலந்து கொண்டுள்ளார்.

அதன் பின்னர் வடமாகாண விளையாட்டு போட்டிக்கு குறித்த மாணவியின் பெயரை பாடசாலையின் பொறுப்பாசிரியர் வழங்கவில்லை . அதனையடுத்து ஏன் எனது பெயரை வழங்கவில்லை என மாணவி பொறுப்பாசிரியரிடம் வினாவிய போது எனக்கு தெரியாமல் சென்று போட்டிகளில் கலந்து கொள்கின்றீர்கள் நான் ஏன் செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பான மாணவியின் பெற்றோர் பாடசாலை அதிபரிடம் முறையிட்ட சமயத்தில் அவரும் இவ் விடயத்தில் கரிசனை காட்டவில்லை .

இதனையடுத்து பெற்றோர் மாணவினை வேறு பாடசாலைக்கு மாற்றுவதற்கு தீர்மானித்தனர். வவுனியாவில் இரு பாடசாலைகளிலேயே பழுதூக்குதல் போட்டிக்குறிய ஆசிரியர்கள் காணப்படுவதினால் வவுனியா நகரில் அமைந்துள்ள பெண்கள் பாடசாலைக்கு மாற்றியுள்ளார்.

மாணவியினை குறித்த பெண்கள் பாடசாலையில் இணைக்கின்ற சமயத்தில் முன்னைய பாடசாலையில் இடம்பெற்ற விடயங்கள் அனைத்தையும் அதிபரிடம் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இதன் போது மாகாண மட்ட போட்டிகளுக்கான பெயர் பட்டியல் அனுப்பிவிட்டோம் தேசிய மட்டத்திற்கு அனுப்புவதாக தெரிவித்துள்ளனர்.

நாளைய தினம் திருகோணமலை கந்தளாய் பகுதியில் தேசிய மட்ட பழுதூக்குதல் போட்டி இடம்பெறவுள்ளது. ஆனால் இதுவரையில் அவ் மாணவியின் பெயர் இணைக்கப்படவில்லை

இதற்கு மாறாக நான்கு மாணவிகளின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் மூவர் மாகாண மட்டத்தில் பங்கு பற்றியவர்கள் , மாகாண மட்ட போட்டிகளிலேயே பங்கு பற்றாத மாணவியும் ஒருவர்

அவ்வாறெனின் தேசிய, மாகாண மட்ட போட்டிகளில் பங்கு பற்றி பதக்கங்கள் , சான்றிதழ்கள் பெற்ற இவ் மாணவியின் ஆற்றல்களுக்கு வாய்ப்புகளை யார் வழங்குவார்?

ஏன் இவ்வாறான சம்பங்கள் இவ் மாணவிக்கு இடம்பெற்றது. என பல கோணங்களில் தேடிய சமயத்தில் ஆரம்பத்தில் குறித்த மாணவி கல்வி கற்ற பாடசாலையின் ஆசிரியரின் மனைவியே தற்போது அவ் மாணவி கல்வி கற்கும் பாடசாலையின் உடற்பயிற்சி பொறுப்பாசிரியர் ஆவர். இதன் அடிப்படையிலியே தனது மகளை அவர்கள் காழ்ப்புணர்ச்சி கொண்டு இவ்வாறு செயற்படுவதாக மாணவியின் தாயார் தெரிவித்தார்.

ஏழை மாணவிக்கு நீதி கிடைக்குமா? வலயக்கல்வி பணிப்பாளரே இது உங்களின் கவனத்திற்கு.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like