பிறந்த நாள் கொண்டாட்டத்தில் மாணவிக்கு நேர்ந்த கொடுமை….!! கூடவிருந்த நண்பர்களால் கற்பழிக்கப்பட்ட கொடூரம்….!!

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் மதுகுடிக்க வைத்து வகுப்புத் தோழியை பாலியல் வன்கொடுமை செய்த சக மாணவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவின் ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் அகிரிபள்ளியில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் படித்து வந்தார் குறித்த மாணவி.கடந்த வருடம் பிப்ரவரி மாதம் உடன் படிப்பவருக்கு பிறந்த நாள். இதையடுத்து ஹொட்டல் ஒன்றில் பார்ட்டி வைக்கப்பட்டது.

சக மாணவர் களுடன் குறித்த மாணவியும் கலந்துகொண்டார். இதனிடையே விழாவின் ஒரு கட்டத்தில், நண்பர்கள் மதுகுடிக்க ஆரம்பித்தனர்.அப்போது அந்த மாணவியையும் மது குடிக்கத் தூண்டி யுள்ளனர். அவர் மறுத்துள்ளார்.

ஆனால், வற்புறுத்தி குடிக்க வைத்து அவரை அதிக போதையாக்கினர். பின்னர் வகுப்பு தோழர்கள் சிவா ரெட்டியும் கிருஷ்ண வம்சியும் போதையில் பாலியல் வன்கொடுமை செய்தனர். அதை வீடியோவாகவும் எடுத்து வைத்துக்கொண்டனர்.இந்நிலையில், இன்னொரு சக மாணவரான பிரவீன், குறித்த மாணவியை சம்பவம் நடந்த 2 மாதங்களுக்கு பின்னர் தொடர்பு கொண்டுள்ளார்.

சிவாவும் கிருஷ்ணாவும் பாலியல் வன்கொடுமை செய்த வீடியோ தன்னிடம் உள்ளதாகவும் அதை சமூக வலைத்தளத்தில் வெளியிடாமல் இருக்க வேண்டும் என்றால் தனது ஆசைக்கு உடன்பட வேண்டும் என்றும் மிரட்டியுள்ளார்.

இதைக் கேட்டதும் அதிர்ச்சி அடைந்துள்ளார் அந்த மாணவி.கடந்த இரண்டு மாதமாக பிரவீன் தொடர்ந்து மிரட்டி வந்ததால் கவலையில் இருந்துள்ளார் அவர். வீட்டில் உள்ளவர்கள் என்ன ஏது என்று தொடர்ந்து விசாரித்தபோது, கண்ணீர்விட்டபடிஇ நடந்த கதையை தெரிவித்துள்ளார். இதையடுத்து தனது பெற்றோருடன் சென்று அக்ரிபள்ளி காவல்துறையில் புகார் செய்தார்.

வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், பிரவீனை கைது செய்தனர். அவனிடமிருந்த செல்போனை பறிமுதல் செய்துள்ளனர்.அதுமட்டுமின்றி குறித்த மாணவியை மருத்துவ பரிசோதனைக்கும் பொலிசார் அனுப்பியுள்ளனர். விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. தலைமறைவான சிவாவையும் கிருஷ்ணாவையும் பொலிசார் தேடி வருகின்றனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like