பாபர் மசூதி இடிப்பு வழக்கு : உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு

இந்தியாவின் ஆளுங்கட்சியான பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் பலர் அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றவியல் சதி குற்றச்சாட்டை எதிர்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

1992-ஆம் ஆண்டு அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டு பின் அதனைத்தொடர்ந்து நிகழ்ந்த இந்து – முஸ்லீம் கலவரம் தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் நீண்ட காலமாக வழக்கு நடைபெற்று வருகிறது.

இந்த கலவரத்தில் சுமார் 2,000 பேர் பலியானார்கள்.

முன்னாள் துணை பிரதமர் எல்.கே அத்வானி மற்றும் உமா பாரதி, தற்போதைய மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர் ஒருவர் உள்பட அனைவரும் தங்கள் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளனர்.

பாபர் மசூதி இடிப்பு வழக்கின் விசாரணை இரண்டு ஆண்டுகளுக்குள் விரைவாக நடத்தப்பட்டு முடிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.