இலங்கைக்கு அடித்த மாபெரும் அதிஸ்ரம்; பணம் கொட்டப்போகிறது: எப்படி என்று தெரியுமா?

இந்திய பெருங்கடல் எல்லை ஊடாக மேலும் 16 லட்ச சதுர கிலோ மீற்றர் கடல் பிரதேசம் விரைவில் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்காக கடல் ஆய்வு தொடர்பான விஞ்ஞானிகள் மற்றும் வல்லுநர்கள் கலந்துரையாடல் மேற்கொண்டு வருவதாக மேலும் குறிப்பிடப்படுகின்றது.

ஐக்கிய நாடுகளின் கடல் சட்டம் தொடர்பான சர்வதேச மாநாட்டிற்கமைய இலங்கைக்கு சட்டரீதியான உரிமை கிடைக்கவுள்ளது, இந்த கடல் பிரதேசம் இலங்கை போன்று 23 மடங்கு பெரியதாகும்.

அதற்கமைய இந்த பாரிய அளவு கடல் எல்லையில் உள்ள பெற்றோலியம் எரிவாயு மற்றும் மதிப்புமிக்க எரிவாயு வகைகளை பயன்படுத்தல், அகழ்வு செய்தல் மற்றும் விற்பனை செய்தல் ஆகிய அனைத்து உரிமையும் இலங்கைக்கு கிடைக்கும் என குறிப்பிடப்படுகின்றது.

விசேடமாக கடல் மட்டத்தின் உரிமை இலங்கைக்கு கிடைக்கும் எனவும் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இந்த பாரிய கடல் எல்லையில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பமும் இலங்கைக்கு கிடைக்கும்.

இந்த மாநாட்டிற்கமைய இலங்கைக்கு புதிதாக கிடைக்கவுள்ள இந்த கடல் உரிமை தொடர்பில் தற்போதும் அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like