வவுனியாவில் காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு

வவுனியா நெடுங்கேணி சேனப்புலவு பகுதியில் கடந்த மாதம் காணாமல்போன இளைஞனின் சடலம் நேற்று ஒட்டுசுட்டானில் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளதுடன் சந்தேக நபர்கள் இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
கடந்த 17.05.2018 அன்று காலை 10.30மணியளவில் நெடுங்கேணிக்கு கடைக்குச் சென்றுவருவதாகத் தெரிவித்து விட்டுச் சென்ற இராஜகோபால் கஜமுகன் 22 வயதுடைய மகன் வீடு திரும்பவில்லை என்று மகனைக்காணவில்லை என்று அவரது தயார் நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும் கடந்த மாதம் 23ஆம் திகதி இளைஞனின் மோட்டார் சைக்கில் வீட்டிற்கு அருகிலிருந்து உறவினர்களினால் மீட்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொலிசார் மோட்டார் சைக்கிலினை நீதிமன்றத்தில் முற்படுத்தி மேலதிக விசாரணைகளை துரிதப்படுத்தினார்கள். நேற்று குறித்த இளைஞனின் சடலம் ஒட்டுசுட்டான் தண்ணிமுறிப்பு காட்டுப்பகுதியிலிருந்து உருக்குலைந்த நிலையில் கைகள், கால் பகுதிகளின் எலும்புகள் சதையின்றி உடலின் பாகங்கள் அங்காங்கேயிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த இளைஞனின்கடத்தல் மற்றும் கொலையுடன் தொடர்புபட்டுள்ளதாகத் இரு இளைஞர்களைக் கைது செய்த பொலிசார்அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது சந்தேக நபர்களில் ஒருவருடைய மனைவியுடன் குறித்த இளைஞன் தொடர்பு வைத்துள்ளதாகவும் இதனாலேயே சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் சந்தேக நபர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் நேற்று மாலை கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களையும் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய போது எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like