விடுதலைப் புலிகளை பற்றி பேசி சிங்கள அமைச்சர்களை வாயடைக்க வைத்த தமிழிச்சி..!

தமிழ் மக்கள் நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் வாழவேண்டுமானால் தமிழீழ விடுதலைப் புலிகள் மீள உருவாக்கப்பட வேண்டும் என சிறிலங்கா அரசாங்கத்தின் சிறுவர் மற்றும் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களானஉள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன மற்றும் உள்நாட்டலுவல்கள் பிரதி அமைச்சர்ஜே.சீ.அளவதுவள ஆகியோர் முன்னிலையிலேயே மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலாமகேஸ்வரன் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.

யாழ்ப்பாணத்தில் யூலை 2 ஆம் திகதியான இன்றைய தினம்திங்கட்கிழமை “உத்தியோகபூர்வப் பணி” ஜனாதிபதி மக்கள் சேவை என்ற தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் 8 ஆவது நிகழ்வு யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது.

வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனும் கலந்துகொண்டிருந்தஇந்த நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய சிறுவர் மற்றும் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர்விஜயகலா மகேஸ்வரன் யாழ் குடாநாட்டில் தீவிரமடைந்துள்ள போதைப்பொருள் பாவணை, சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்பில் கடும் ஆத்திரம் வெளியிட்டதுடன்,தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் இவ்வாறான சம்பவங்கள்இடம்பெறவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.

உத்தியோகபூர்வ பணிகளுக்கு எந்தவித ஆதரவையும் வழங்க முடியாதநிலையில் யாழ் மாவட்ட மக்களான நாங்கள் இன்று தள்ளாடிக் கொண்டிருக்கின்றோம் என்பதை இந்தநிகழ்வில் கதாநாயகன்களாக அமர்ந்துகொண்டிருக்கும் அமைச்சர்கள் இருவரிடமும்மனவருத்தத்துடன் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

எங்களுடைய ஆறு வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுபடுகொலைசெய்யப்பட்ட கொடூரம் நிகழ்ந்திருக்கின்றது. இவ்வாறான கொடூரங்களை தடுக்கமுடியாத எமக்கு எதற்காக உத்தியோபூர்வ பணி நடமாடும் சேவை எங்களுக்கு.

உண்மையிலேயே 2009 மே 18 க்கு முதல் நாங்கள தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தில் எப்படி வாழ்ந்தோம் என்பதை ஒவ்வொருத்தரும் உணர்வுபூர்வமாகஉணர்கின்றோம்.

உண்மையிலேயே இன்றைய நிலை தமிழீழ விடுதலைப் புலிகளை மீளஉருவாக்க வேண்டும் என்பது எங்களது முக்கிய நோக்கம். நாங்கள் உயிருடன் வாழ வேண்டும்என்றால் நாங்கள் நிம்மதியாக வீதியில் நடக்க வேண்டுமானால் எங்களது பிள்ளைகள்நிம்மதியாக கல்வி கற்பதற்கு பாடசாலைக்கு சுதந்திரமாக சென்று வீடு திரும்ப வேண்டுமானால்வடக்கு கிழக்கிலே தமிழீழ விடுதலைப் புலிகளின் கை ஓங்க வேண்டும்” என்று சிறுவர்மற்றும் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மிகவும் ஆவேசத்துடன் தெரிவித்திருக்கின்றார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like