பெண்களின் அந்தரங்கங்களை படம் பிடிக்கும் ரகசிய கமெரா..!!.உங்கள் வீட்டிலும் இருக்கலாம்..! பெண்களே ஜாக்கிரதை..!

ஜவுளிக் கடைகள், லாட்ஜ்களில் ரகசிய கமராக்களை பொருத்தி பெண்கள் உடை மாற்றுவது போன்ற காட்சிகளை படம் எடுக்கும் அநாகரிக செயல்கள் தொழில்நுட்பத்தின் உதவியுடன் அரங்கேவது மட்டுமல்லாமல்.. அதிகரித்தும் வருவது இன்றைய பெண்களுக்கு ஒரு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது.

சில ஜவுளிக் கடைகளின் உடை மாற்றும் அறைகள், சில லாட்ஜ்களின் படுக்கை அறைகளில் ரகசிய கேமரா வைக்கப்படுகின்றன. இதில் பதிவாகும் காட்சிகளை சிலர் பார்த்து ரசிப்பதோடு, இணைய தளங்கள் வரை பதிவேற்றம் செய்யப்பட்டு அது சம்பந்தப்பட்ட பெண்ணின் அந்தரங்கங்களை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.

இதனால்.. மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்ட பெண்களின் எண்ணிக்கை என்பது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது.

உடை மாற்றும் அறை, குளியல் அறை, படுக்கை அறை போன்றவற்றில் மறைத்து வைக் கப்படும் ரகசிய கேமராக்கள் சிசிடிவி (கண்காணிப்பு கேமரா) போல பெரிய அளவில் இருக்காது. கண்ணுக்கு தெரியாத இடத்தில் மிக மிக சிறிய அளவில் பொருத்தப்பட்டிருக்கும்.

ஸ்குருவின் தலைப்பகுதி, கடிகாரம், பிளக் பாய்ன்ட், பிளக் ஹோல்டர், முகம்பார்க்கும் கண்ணாடியின் பின்புறம், குளிர்சாதன பெட்டி, கதவின் கைப்பிடி என எதிலும் இதைப் பொருத்தமுடியும். லாட்ஜ்களில் படுக்கை, குளிக்கும் இடம் ஆகியவற்றை நோக்கியுள்ள அனைத்து இடங்களையும் முதலில் கவனமாகப் பார்க்க வேண்டும். விளக்கை அணைத்த பிறகு, இருட்டாக உள்ள அறைகளில் படம் பிடிக்கக்கூடிய நவீன அகச்சிவப்பு கேமராக்களையும் இந்த அநாகரிக வேலைக்கு பயன்படுத்துகிறார்கள்.

இந்த ரகசிய கேமராக்களை கண்டுபிடிப்பது எப்படி என்பதைப் பற்றி விரிவாக இங்கு காண்போம்…

உடை மாற்றும் அறையில் உள்ள ரகசிய கேமராவை கண்டறிவது எப்படி?

அறைக்குள் நுழைவதற்கு முன் உங்கள் செல்போனிலிருந்து கால் செய்ய முடிகிறதா.?என்பதை உருதிப்படுத்திக்கொள்ளவும்..பின்னர் அறைக்குள் சென்றவுடன் மீண்டும் உங்கள் செல்போனிலிருந்து கால் செய்து பார்க்கவும் .

பலமுறை முயற்சித்தும் உங்களால் கால் செய்ய முடியாவிட்டால் நிச்சயம் அங்கே ரகசிய கமரா  வைக்கப்பட்டிருக்கின்றது.

எப்படி என்றால்

கண்ணாடி இழை கேபிள் (fiber optic cable)வழியாகத்தான் ரகசிய கேமராக்கள் இணைக்கப்பட்டிருக்கும்.இந்த கண்ணாடி இழை கேபிள் குறுக்கீடுகாரணமாக உங்களுடைய செல்போன் சமிக்ஞை(signal transfer) பரிமாற்றங்கள் தடை செய்யப்படுவதே நீங்கள் கால் செய்ய முடியாதற்க்கு காரணம்.

ஹோட்டல் அறைக்குள் நுழைந்ததும் அனைத்து மின் விளக்குகளையும் அணைத்து விட்டு, அறை முழுவதையும் செல்போனில் வீடியோ எடுங்கள். பின்னர் அதை ஓடவிட்டுப் பாருங்கள். எந்த இடத்திலாவது சிவப்பு அல்லது வெள்ளை நிற ஒளி வந்தால் கமரா இருக்கிறது என்று அர்த்தம்.

செல்போனில் யாரிடமாவது பேசியபடியே அறை முழுவதும் மெதுவாக நடந்து செல்லுங்கள். திடீரென இரைச்சல் சத்தம் கேட்டால், அருகே ரகசிய கேமரா போன்ற எலக்ட்ரானிக் பொருட்கள் இருக்கிறது என்று உணர்ந்துகொள்ளலாம்.

ரகசிய கமரா மட்டு மின்றி, முகம் பார்க்கும் கண்ணாடியால் கூட வில்லங்கம் ஏற்படலாம். பொதுவாக உயர் அளவிலான போலீஸ் விசாரணை, ஆட்களை அடையா ளம் காட்டுதல் போன்றவற்றுக்கு ‘டூ வே’ (இருபக்க) கண்ணாடி பயன்படுத்தப்படும். அதாவது, முகம் பார்க்கும் சாதாரண கண்ணாடிதான்.

ஆனால், அதன் பின்னால் இருந்துகொண்டு இங்கு நடப்பதை பார்க்க முடியும். அவர்கள் இருப்பது இங்கிருந்து தெரியாது. லாட்ஜ்கள், ஜவுளிக் கடைகளில் இருப்பது இத்தகைய கண்ணாடி இல்லை என்பதை உறுதிசெய்துகொள்வது அவசியம்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like