கணவனின் பிறப்புறுப்பில் தாக்கிய மனைவி கொலை- இலங்கையில் நடந்த சோக சம்பவம்!

சச்சினி என்னுடைய பிறப்புறுப்பில் பெல்ட் மூலம் பலமாக தாக்கினாள்.வலி தாங்க முடியவில்லை….. அலறிக்கொண்டு கத்தினேன் துடிதுடித்தேன்… கோபம் தாங்க முடியாமல் கத்தியால் அவளின் மார்பகப்பகுதியில் குத்தினேன்.புத்தளத்தில் இடம்பெற்ற பதற வைக்கும் உண்மை சம்பவம்.

சச்சினி புத்தளம் பகுதியில் வசிக்கும் உயர் தரம் முடித்த யுவதியாவாள்.சச்சினிக்கு திருமணம் முடிக்க அவளின் பெற்றோர் ஆசைப்பட்டனர். சச்சினியை அவள் அம்மா அழைக்கின்றாள்… சச்சினி நீ யாரையாவது விரும்புகிறாயா

நாங்கள் உனக்கு மாப்பிள்ளை பார்க்க தயாராகின்றோம். என்ன சொல்கிறாய் என அம்மா வினவியுள்ளார்.அதற்கு பதிலளித்த சச்சினி…. அம்மா நான் விரும்புவதாக இருந்தால் இத்தனை காலம் உங்களுடன் வசித்திருக்க மாட்டேன், யாரேனும் ஒருவருடன் ஓடிபோய் திருமணம் செய்துக்கொண்டிருப்பேன். நீங்கள் இப்படி கேட்பது மனதுக்கு கஷ்டமாக இருக்கு அம்மா… நீங்கள் யாரை திருமணம் முடிக்க வேண்டும் என்று கூறுங்கள் நான் முடித்துக்கொள்கின்றேன். தாய் கண்ணீர் விட்டாள்… ஏன் அம்மா அழுகின்றீர்கள் என சச்சினி தனது தாயை பார்த்து கேட்க… இல்லை மகளே ஒன்றும் இல்லை என தெரிவித்து ஆனந்த கண்ணீருடன் அந்த இடம்விட்டு நகர்ந்து சென்றார் சச்சினியின் தாய்.சச்சினியின் தாய் அவரின் கணவருடன் கலந்துரையாடுகிறார். மகள் யாரையும் விரும்பவில்லையாம்… யாரை தெரிவு செய்தாலும் நாங்கள் கூறுபவரை அவள் திருமணம் செய்துக்கொள்வாளாம் என உறுதியாக கூறிவிட்டால். இந்த உலகில் இப்படி ஒரு மகளா….நான் நன்றாக எனது மகளை வளர்த்திருக்கின்றேன்… தனது கணவரிடம் கூறி பெருமை படுகிறார் சச்சினியின் தாய்.

திருமண தரகர் ஒருவர் வாயிலாக தனது மகளுக்கான மணமகனை தேடுவதற்கு ஆரம்பிக்கின்றனர் சச்சினியின் பெற்றோர்.ஒவ்வொரு ஞாயிற்று கிழமைதோறும் மாப்பிள்ளை ஒருவர் சச்சினியை பெண்பார்த்து செல்வார்.ஆனால் போனதன் பின்னர் எந்த பதில்களும் வந்து சேராத நிலையில் சச்சினியும் விரக்தியில் காணப்பட்டுள்ளார்.இந்நிலையில் பெண் பார்த்துவிட்டு சென்றவர்களில் ஒருவர் சச்சினியை பிரத்தியேகமாக தனியாக சந்திக்கின்றார்.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

சச்சினி சச்சினி…. மிஸ் கொஞ்சம் எனக்காக ஒரு நிமிடம்…. என்னோட கதைப்பீர்களா என கேட்டுள்ளார்.வீதியில் சென்றுக்கொண்டிருந்தவாறு திரும்பி பார்த்த சச்சினி… உங்களுக்கு என்ன வேண்டும்… ஏன் என்னை பின் தொடர்கின்றீர்கள். யாரேனும் பார்த்தால் வீட்டில் தவறாக கூறிவிடுவார்கள். தயவு செய்து இந்த இடத்தை விட்டு நகருங்கள். என கோபமாக பேசினாள்.சரி நான் சொல்வதையும் ஒரு நிமிடம் கேளுங்கள். உங்களை நான் பெண் பார்க்க வந்தன். எனக்கு உங்களை பிடிக்கும் வீட்டிலுள்ளவர்கள்தான் உங்களை வேண்டாம் என கூறினார்கள். ஆனாலும் எனக்கு உங்களை நிறைய பிடிக்கும். இதை பிடியுங்கள் இது என்னுடைய கைப்பேசி இலக்கம் பிடித்திருந்தால் கோல் பண்ணுங்க என தெரிவித்துவிட்டு வேகமாக சென்ற திசைக்கு எதிர் திசைநோக்கி நடந்தார் பிரியந்தன்.

“இரண்டு நாட்கள்… நான்கு நாட்கள்…. ஒரு வாரம்… இரண்டு வாரம்” என நாட்கள் கடந்தன.நான்காவது வாரம் பிரியந்தனின் தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வருகின்றது.நான் சச்சினி…. உங்களை கொஞ்சம் பார்க்க வேண்டும். வருவீர்களா…. நான் எங்கு வரவேண்டும் என சொல்லுங்கள்… எங்களது வீட்டிற்கு கீழே செல்லும் வீதியிலுள்ள பஸ் ஸ்டேண்ட்க்கு அருகில் காத்திருங்கள் என கூறி தொலைபேசி அழைப்பை துண்டித்தாள்.

அவசரமாக புறப்பட்ட பிரியந்தன் சச்சினி கூறிய இடத்திற்கு சென்றான் தாமதமாக சச்சினியும் அவ்விடத்திற்கு வருகை தந்தாள்.அம்மா அப்பா வீட்டில் இல்லை என்பதால் தான் உங்களை நான் சந்திக்க அழைத்தேன்… எனது பெற்றோர் எனக்கு பல மாப்பிள்ளைகளை பார்த்து விட்டனர். ஆனால் இதுவரை எதுவும் சரியாக அமையவில்லை. அவர்கள் கஷ்டப்படுவதை என்னால் பார்க்க முடியவில்லை. நான் எனது பெற்றோரிடம் கதைத்தால் என்னை திருமணம் செய்து கொள்வீர்களா…! என கேட்டாள்.

உடனே சம்மதம் தெரவித்த பிரியந்தன்… எனது பெற்றோர் விரும்பா விடினும் நான் உன்னை திருமணம் செய்வேன் என உறுதியளித்தான்.இருவரும் பெற்றோருக்கு தெரியாது காதலித்து வருகின்றனர். சச்சினியின் பெற்றோருக்கும் விடயம் தெரிந்து விட்டது…. சரி மகள் ஆசைபட்டு விட்டால்… திருமணம் முடித்து வைக்கலாம் என நினைத்துக்கொண்டு பெற்றோரும் கண்டுக்கொள்ளாமல் இருந்துள்ளனர்.

இந்நிலையிலேயே பெற்றோருக்கு அயலவர்களால் ஒரு தகவல் கிடைக்கின்றது.சச்சினி விரும்பும் நபர் மனநல நோயாளி எனவும் அவர் புத்தளம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்பதோடு அவருக்கு பூரணமாக குணமடையவில்லை எனவும் பெற்றோரிடம் தெரிவிக்கின்றனர்.மனமுடைந்து போன பெற்றோர் என்ன செய்வதென்று தெரியாமல் கடவுளிடம் பிரார்த்திக்கின்றனர்.மகளின் இந்த தீர்மானத்தில் மாற்றம் வேண்டும் என மன்றாடுகின்றனர். முடியாத நிலையில், நேரடியாக மகளிடமே சென்று கதைக்கின்றனர்.அந்த நபர் சரியில்லை உனக்கு ஏற்றவர் அல்ல அவரிடம் கதைப்பதை நிறுத்தி விடு என கூறுகிறார்கள்.ஆனால் சச்சினிக்கோ பிரியந்தனை பிரிய மனமில்லை… பிரியந்தனுடன்தான் வாழ்வு இல்லையென்றால் மரணத்தை தழுவிக்கொள்ளலாம் என நினைத்து கொண்டு வீட்டிலிருந்து வெளியேறி பிரியந்தனுடன் சென்றாள் சச்சினி.

இருவரும் வாடகைக்கு ஒரு வீட்டில் வசித்த போது…. சச்சினியின் பெற்றோர் வந்து பார்த்துள்ளனர்.சச்சினி நீ வீட்டுக்கு வா இருவருக்கும் திருமணம் செய்து வைக்கின்றோம். பெற்றோர் நாங்கள் உனக்கு ஒரு போதும் பொய் கூறமாட்டோம் என தெரிவித்து சச்சினியை அழைத்து சென்றனர்.ஓரிரு வாரங்களில் சச்சினி மற்றும் அவள் விரும்பிய பிரியந்தன் ஆகிய இருவருக்கும் திருமணம் நடக்கின்றது.உத்தியோகபபூர்வமாக பதிவு செய்யப்பட்டு சச்சினி மற்றும் பிரியந்தன் ஆகியோர் கணவன் மனைவியாகினர்.

இந்நிலையில், பிரியந்தன் மனநோயாளியாக இருப்பது சச்சினிக்கும் தெரியும். அவர் குளிசைகள் எடுத்துக்கொள்வதும் அவளுக்கு நன்றாக தெரியும்.ஆனால் சிறிது காலம் சென்றதும் சச்சினிக்கும் பிரியந்தனுக்கும் இடையில் தினமும் வாய்தர்க்கம் நடைபெறுகின்றது.பிரியந்தன் வேலை முடிந்து வீட்டிற்கு வந்ததும் சண்டை ஆரம்பித்துவிடும். இருவருக்கும் இடையில் கடுமையான வாய்தர்க்கம் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்வது என சச்சரவுடன் தொடர்கின்றது அவர்களது வாழ்க்கை.பிரியந்தன் மனநோய்க்கு மருந்து சாப்பிடுவதால் இருவரின் தாம்பத்திய வாழ்க்கைக்கு பிரியந்தனின் பிறப்புறுப்பு ஒத்துழைக்கவில்லை.

இதனால் ஏமாற்றமடைந்த சச்சினி தினமும் அதனை சுட்டிக்காட்டி பிரியந்தனை நிந்தித்து வந்தாள். மனமுடைந்த பிரியந்தன் என்ன செய்வதென்று தெரியாமல் வாயடைத்து போய் கேட்டுக்கொண்டிருப்பான்.இந்நிலையில், வழமையை போன்று ஒரு தினம் பிரியந்தன் வேலை முடிந்து வீட்டிற்கு வந்ததும் சண்டை ஆரம்பித்து விட்டது.

நீராடிவிட்டு வீட்டிற்குள் திரும்பிக்கொண்டிருந்த பிரியந்தனை பெல்ட் ஒன்றினை கொண்டு சச்சினி தாக்குகிறாள்.

அவள் பிரியந்தனின் பிறப்புறுப்பை குறி வைத்து தாக்கியதால் துடிதுடித்து அதே இடத்தில் விழுந்து மயங்கினான்…. பல நிமிடங்கள் வரை அவன் மயக்கத்தில் காணப்பட்டுள்ளான்.தொடர்ச்சியாக சச்சினி தாக்கியுள்ளார். நீண்ட நேரம் மயக்கத்தில் காணப்பட்ட பிரியந்தன் எழுந்ததும் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளாள்.கோபம் தாங்காத பிரியந்தன்… பொறுமையை இழந்தான்… கத்தியை எடுத்து மனைவியான சச்சினியின் மார்பக பகுதியில் குத்துகிறான்.

மனைவி இரத்தம் பீச்சிட மயங்கி விழுந்த நிலையில் கடந்த 26 ஆம் திகதி வைத்தியசாலையில் சேர்க்கப்படுகின்றாள்.சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் நான்கு தினங்களின் பின்னர் இவ்வுலகை விட்டு பிரிந்தாள் சச்சினி.சச்சினி தாக்கியதோடு மேலதிக காயங்களையும் ஏற்படுத்திக்கொண்டு பிரியந்தன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றான்.

ஆசைப்பட்ட மனைவியின் இறுதி சடங்கினையும் பிரியந்தனின் கண்களுக்கு பார்க்க கிடைக்கவில்லை.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளதோடு… அதிர்ச்சியையும் தந்துள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like