யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினரான குகேந்திரனுக்கு எதிராக வழக்கு தாக்கல்

யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஈ.பீ.டீ.பி உறுபபினர் ஒருவர் இரட்டைப் பிரஜா உரிமை உடையவர் என்பதன் அடிப்படையில் மாநகர சபை உறுப்பினராக இருக்க முடியாது என தேர்தல் ஆணையகத்திற்கு ஆணையிடுமாறுகோரி கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர சபையில் அங்கம் வகிக்கும் ஈ.பீ.டீ.பியின் உறுப்பினரான குகேந்திரன் இரட்டைப் பிரஜா உரிமை உள்ளபோதும் விகிதாசாரப் பட்டியலின் ஊடாக உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த வகையில் இரட்டைப் பிரஜா உரிமை உடையவர்கள் உள்ளூராட்சி மன்றங்களிலும் அங்கம் வகிக்க முடியாது என்றதன் அடிப்படையில் குறித்த உறுப்பினரின் பதவியை இரத்துச் செய்யுமாறு தேர்தல் ஆணையகத்திற்கு உத்ணரவிடுமாறு கோரியே குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மாநகர சபையின் சக உறுப்பினர் ஒருவரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த வழக்கு நேற்று முன்தினம் சட்டத்தரணி ஊடாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like